“மகளிர் உரிமைத் தொகையால் கூடுதல் நிதிச்சுமை... ஆனா...” - ப.சிதம்பரம் கொடுத்த புதுவித விளக்கம்...!
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. ஆனால் உரிமைத்தொகை காரணமாக பல பலன்கள் இருக்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளரிடம் பேசுகையில், தேர்தல் கூட்டணியில் காங்கிரஸ் நிலைப்பாடு என்பது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது முதலமைச்சரை சந்தித்துள்ளார்கள் படிப்படியாக பேச்சுவார்த்தைகள் நிறைவு பெறும் என்றார்
மாவோஸ்டுகள் இந்தியாவில் குறைக்கப்பட்டதாக மத்திய அரசு கூறி வருகிறது குறித்து எழுப்பிய கேள்விக்கு, மாவோஸ்டுகள் தற்போது குறையவில்லை 2008 இலையே மாவோயிஸ்டுகள் நக்சலேட்டுகளுக்கு எதிராக தனிப்படைகள் அமைத்து சத்தீஸ்கர் ஆந்திரா ஒடிசா மேற்கு வங்காளத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவியில் இருக்கும் பொழுது போலிட் பீரோ அவர்களைக் கொன்று குவித்து நடவடிக்கை கீழ் குறைக்கப்பட்டார் அவர்களில் மூன்றில் ஒரு பங்கு கைது செய்யப்பட்டார்கள்
அதன் தொடர்ச்சி தான் இந்த அரசு தொடர்கிறார்கள் இந்த முயற்சியில் மாவோயிஸ்டுகளும் நக்சலைட்டுகளும் வெல்லவே முடியாது குறைந்து கொண்டு தான் வருவதை நான் வரவேற்கிறேன்.
இதையும் படிங்க: மகளிருக்கு இனி மாதம் ரூ.1000 இல்லை ரூ.2,500 வழங்கப்படும்... முதல்வர் அதிரடி அறிவிப்பு...!
திமுக தேர்தல் அறிக்கை அரசு ஊழியர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை தொடர்ந்து போராடுவதை தொடர்பாக கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் சில பிரச்சனைகள் எனத்தான் செய்யும் அதை சமாளிப்பதும் எதிர்கொள்வதும் பேச்சுவார்த்தை மூலமாக நடத்துவது ஒரு அரசின் கடமை, எல்லா தேர்தலையும் இது போன்ற பிரச்சனைகள் எழத்தான் செய்யும் சில கோரிக்கைகளை கடைசி நேரத்தில் வலியுறுத்துவார்கள் அதை அரசு தீர்க்கும் பேச்சு வார்த்தை மூலமாக தீர்ப்பார்கள்.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் அரசுக்கு நிதிச் சுமை ஏற்படுவது குறித்த கேள்விக்கு, கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. ஆனால் உரிமைத்தொகை காரணமாக பல பலன்கள் இருக்கிறது பொருளாதார நிபுணர்களை அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றார். பெண்களுக்கு உரிமைத் தொகை கொடுப்பதால் பல பலன்கள் இருக்கிறது என்று உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றார். அதை பல மாநிலங்கள் உரிமைத்தொகை பல்வேறு பெயர்களில் வழங்கி வருகிறது என்றார்.
சர்வதேச அளவில் தங்கம் வெள்ளி உயர்கிறது அதைப் பற்றிய கேள்விக்கு, நான் தங்கம் வெள்ளி வாங்குவதில்லை நகைச்சுவையாக கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தேவாலயத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடுவது குறித்த கேள்விக்கு, 11 ஆண்டுகள் கழித்து கிறிஸ்துவ குழந்தைகள் வீதி வீதியாக ஆடல் பாடல் பாடும் நிகழ்வில் நுழைந்து தாக்குல் நடக்கிறது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 11 ஆண்டுக்கு பிறகு கிறிஸ்மஸ் விழாவில் கொண்டாடி இருக்கிறார் கிறிஸ்துவ குழந்தைகள் மீது தாக்குதல் திடீரென்று 11 ஆண்டுக்கு பிறகு நரேந்திர மோடி கிறிஸ்மஸ் விழாவில் பங்கேற்கிறார் இதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? என்றார்.
இதையும் படிங்க: “முடியாதுன்னீங்க... பாஜக, அதிமுக முகத்துல கரியை பூசிட்டோம் இல்ல...” - திமுக அமைச்சர் உற்சாகம்...!