“இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!
இதோட பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் திமுக காரர்கள் எந்த விதத்தில் அவமானப்படுத்தி பேசுவார்கள் என்று நீங்கள் அறிவீர்கள்.
சட்டசபையை அநாகரிகமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் விஜய்... திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறினார். ஆனால் தற்போது சோபா மாடல் கூட்டணி அமைத்து இருக்கிறீர்கள். விஜய் பேச்சில் ஆணவம் தெரிகிறது. ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் விஜய் பேச்சுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள். பொய்யாக பேசி உடனே ரில்ஸ் வெளியிடுகிறார்கள் என திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்
தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திமுக தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தூத்துக்குடி மாநகரில் உள்ள சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: சட்டசபையில் விஜய்யின் அந்த சைகை..!! தவெக ஆர்டர் செய்த விநாயகர் சிலைக்கு வந்த சிக்கல்..!!
இந்த ஆர்ப்பாட்டத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை உரைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது., ஆட்சியை மைனாரிட்டி முறையில் கைப்பற்றி இருக்கிறார். பெரும்பான்மை இல்லை. அமைச்சர் தருவதாக கூறி குதிரை பேரம் பேசி திமுக கூட்டணியில் உள்ளவர்களையும் அதிமுகவில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களையும் கூட்டி ஆட்சி அமைந்திருக்கிறது.
சபையில் பேசத் தெரியாது என்ன நடக்கிறது என்று அறிவு கிடையாது. ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞரையும், முன்னால் அமைச்சர் முரசொலி மாறனையும் கொச்சைப்படுத்தி பேசுகிறார்
முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலினை தலைவரின் பையன் என்ற ஒரே காரணத்திற்காக சிறையில் தள்ளினார்கள். இந்த தியாகத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். முதல்வர் பேச்சுக்கு கடும் கண்டனம். இதோட பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் திமுக காரர்கள் எந்த விதத்தில் அவமானப்படுத்தி பேசுவார்கள் என்று நீங்கள் அறிவிர்கள்.
அவர் பேச்சில் ஆணவம் தெரிகிறது. பேச்சை முட்டு கொடுப்பதற்கு ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் முட்டுக் கொடுக்கிறார்கள். பொய்யாக பேசி உடனே ரில்ஸ் வெளியிடுகிறார்கள்.
தூத்துக்குடியில் டிவிகே பெண் நிர்வாகிகளை அதே கட்சியினர் இழிவாக பேசி பாலியல் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என 15 கேள்வி கேட்கப்பட்டது.. ஆனால் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை மடைமாற்றி பேசுகிறார்கள்.
தலைநகரில் காவல்துறை கட்டுப்பாடு இல்லாமல் கொலைகள் நடைபெறுகிறது. விஜய்க்கு தமிழக வரலாறு தெரியாது.
ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்திருக்கிறது. உன் கூற்றுப்படி ராகுல் காந்தி குற்றவாளியா?கேரள முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் மீதும் அறிக்கை கொடுத்திருக்கிறது அவர் குற்றவாளியா? விஜய் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிக்கை கூறி இருக்கிறது நீ குற்றவாளியா?
சட்டசபையை அநாகரிகமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்.. விஜய். கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறினார். சோபா மாடல் கூட்டணி அமைத்து இருக்கிறீர்கள்
காங்கிரஸ் கட்சியினர் ராகுல் தான் பிரதமர் என்கிறார்கள்.. உங்கள் அமைச்சர்கள் விஜய் தான் பிரதமர் என்கிறார்கள்.. ஆனால் கூச்சமே இல்லாமல் மாணிக்கம் தாகூர் கட்சியினர் சப்பை கட்டு கட்டுகிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வர முடியாது என்று ஓங்கி கரியை பூசினார்கள். நீங்கள் அமைத்து இருக்கும் கூட்டணி வெற்றுக் கூட்டணி. திமுக ஒரு நாளும் யாருக்கும் அஞ்சாவது. முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்..
இதையும் படிங்க: தவெகவுக்கு இடியை இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... இடைத்தேர்தலில் விஜய்க்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!