×
 

அப்பன்கள் தீவிரவாதிகள்.. மகன்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் பொறுப்புகளில்.. வெளங்குமா இது.?

பாகிஸ்தான் ராணுவத்தின் முகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஷெரீப் சவுத்ரி ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட சர்வதேச தீவிரவாதியின் மகன் என்கிற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் முகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்  ஷெரீப் சவுத்ரி ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட சர்வதேச தீவிரவாதியின் மகன் என்கிற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம், ஜிஹாதி, தீவிரவாத அமைப்புகள் வேறு வேறு அல்ல. இவை பின்னிப் பிணைந்துள்ளது எனக் கூறப்படுவது உண்டு. ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட ஜெய்ஸ்-இ-அகமது அமைப்பைச் சேர்ந்தவர்களின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பங்கேற்றது ஓர் உதாரணம். இதேபோல பாகிஸ்தான் ராணுவத்தில் 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி. இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) இயக்குநராக பதவியில் உள்ளார். இவர், பாகிஸ்தான் ராணுவத்தின் முகமாக செயல்பட்டு வருகிறார்.



குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர் இவர்தான். அப்போது இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பொய்யான தகவலை தெரிவி்த்தார்.
சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்-காய்தாவின் நிறுவனரும் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு (9/11) காரணமானவருமான ஓசாமா பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி சுல்தான் பஷிருதீன் முகமது. அணு விஞ்ஞானியான இவருடைய மகன்தான் இந்த அகமது ஷெரீப் சவுத்ரி. அவருடைய தந்தை அணு ஆயுத தொழில்நுட்பத்தை அல்-காய்தா அமைப்புக்கு வழங்க முயன்றதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் அல்-காய்தா, தலிபான் இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், நிதி திரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச தீவிரவாதிகளின் பட்டியலில் இவருடைய பெயரைச் சேர்த்தது.



இவருடைய மகனான அகமது ஷெரீப் சவுத்ரி இப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் முகமாக செயல்பட்டு வருகிறார். தீவிரவாதத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நீலிக் கண்ணீர் வடித்து வருபவரும் இவரேதான். பாகிஸ்தான் ராணுவத்தில் ஜிகாதி கலப்பு இருப்பதற்கான மற்றொரு உதாரணம் அதன் ராணுவ தளபதியான ஜெனரல் அசிம் முனீர். இவருடைய தந்தை ஓர் ஆசிரியர்-மதகுரு. அணு விஞ்ஞானியாகவும் இருந்த முனீரின் தந்தை, ஒருகட்டத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு பீதியை உண்டாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முதல் உரையில் புதிய போப் மகிழ்ச்சி.!!

இதையும் படிங்க: போர் நிறுத்தத்துக்கு பிறகும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிளாக் அவுட் உத்தரவு.. மீண்டும் பீதியில் மக்கள்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share