போர் நிறுத்தத்துக்கு பிறகும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிளாக் அவுட் உத்தரவு.. மீண்டும் பீதியில் மக்கள்.!
பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் ராஜஸ்தானின் ஜெய்சால்மரின் இன்று இரவும் பிளாக் அவுட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் ராஜஸ்தானின் ஜெய்சால்மரின் இன்று இரவும் பிளாக் அவுட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கையைத் தொடங்கியது. மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள இந்திய மாநிலங்கள் மீது ஆளில்லா விமானம் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால், இத்தாக்குதல் முயற்சிகள் அனைத்தையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
நான்கு நாட்களுக்கு இத்தாக்குதல் சம்பவம் நீடித்தது. இந்நிலையில் மே 10 அன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இருப்பினும், எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது சர்ச்சையானது. என்றாலும் நேற்று இரவு 10.30 மணிக்கு மேல் முழுமையாக சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து எல்லையோர மாநிலங்கள் இயல்புக்குத் திரும்பத் தொடங்கின. இந்நிலையில், எல்லை மாநிலமான ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இன்று இரவு 7.30 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பிளாக் அவுட் (இருளில் மூழ்கிய பகுதி) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரம்மோஸ் ஏவுகணை அடி எப்படி இருக்கும்.? பாகிஸ்தானிடம் கேளுங்கள்.. யோகி ஆதித்யநாத் தெறி பேச்சு!
பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றப்பகுதிகளில் உள்ள மின்விளக்குகளை அணைத்து வைக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகும், பிளாக் அவுட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் பீதியிலும் தள்ளியுள்ளது.
இதையும் படிங்க: 'உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்'..! பாக்., விவகாரத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா விடுத்த எச்சரிக்கை..!