×
 

ஆபரேஷன் சிந்தூர் 2.0! இறங்கி அடிக்கும் இந்தியா! குலைநடுங்கும் பாக்.,! மீண்டும் போர் பதற்றம்!

'ஆப்ரேஷன் சிந்துார்' நடவடிக்கையை போல, மற்றொரு ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்தால் என்ன செய்வது என்ற அச்சத்தில், எல்லையின் பல பகுதிகளில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானங்களை அழிக்கும் அமைப்புகளை பாக்., நிறுவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இந்திய ராணுவம் 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. 

இந்தியாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை முறியடித்து வெற்றிகரமாக இலக்குகளை தாக்கியதால், பாகிஸ்தான் ராணுவம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது.

இந்நிலையில், இந்தியா மீண்டும் இதுபோன்ற ராணுவ நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் கதிகலங்கியுள்ளது. எல்லைப் பகுதிகளில் மீண்டும் இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், பாகிஸ்தான் 35க்கும் மேற்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை விரைவாக நிறுவி வருகிறது. 

இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க மாட்டேன்!! ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் மூத்த தலைவர் அடம்!

இந்த அமைப்புகள் ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச், நவ்ஷோரா போன்ற இடங்களுக்கு எதிரே உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைக்கப்படுகின்றன.

இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளில் 'ஸ்பைடர் கவுன்டர்' போன்ற சிறிய ட்ரோன்களை 10 கிலோமீட்டர் தொலைவில் கண்டறியும் கருவிகள், ட்ரோன்களின் வீடியோ மற்றும் ஜிபிஎஸ் சிக்னல்களை செயலிழக்கச் செய்யும் ஜாமிங் துப்பாக்கிகள், மேலும் ட்ரோன்களை நேரடியாக சுட்டு வீழ்த்தும் ஆயுதங்கள் ஆகியவை அடங்கும். 

இந்திய ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு முற்றிலும் தோல்வியடைந்தது. எனவே, மீண்டும் அத்தகைய தாக்குதலை சமாளிக்க பாகிஸ்தான் இப்போது தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்தியாவின் உறுதியான நடவடிக்கை பாகிஸ்தானை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில், எல்லையில் அமைதி நிலவுவதற்கு பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பாகிஸ்தானை சுளுக்கெடுத்த ரபேல் விமானி ஷிவாங்கி! இந்திய விமானப்படையில் புதிய பொறுப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share