×
 

ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி..! பல்வேறு விமானங்கள் ரத்து.. பயணிகளை உஷார்ப்படுத்தும் நிறுவனங்கள்..!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலைக்கு வந்து அசாதாரண சூழல் நிலவுவதால் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் இந்த தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, லாகூர், சியால்கோடி விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தீவிரவாத தலைமையகங்களை தகர்த்த இந்தியா! ஜெய்ஹிந்த்... நீதி நிலைநாட்டப்பட்டதாக பூரிப்பு..

இதனிடையே பல்வேறு விமானங்கள் ரத்து மற்றும் திருப்பி விடப்படுவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எனவே பயணிகள் கவனமாக இந்த அறிவிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: இறங்கி அடிக்கும் இந்திய ராணுவம் "ஆப்ரேஷன் சிந்தூர்"! அதிகாலையே அதிரடி பாய்ச்சல்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share