×
 

இறங்கி அடிக்கும் இந்திய ராணுவம் "ஆப்ரேஷன் சிந்தூர்"! அதிகாலையே அதிரடி பாய்ச்சல்..!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று அதிகாலை இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

பகல்காம் தீவிரவாத தாக்குதலால் 26 உயிர்கள் பறிபோனது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகின்றன.  இதற்கிடையே பிரதமர் மோடி முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போர்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்..! 3 வீரர்கள் உயிரிழந்த சோகம்..!

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பகவல்பூரில் உள்ள பயங்கரவாத கட்டுமானங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை நடத்தியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் பற்றிய முழு விளக்கத்தினை இன்று காலை 10 மணியளவில் ஊடகங்கள் வாயிலாக விளக்கம் அளிப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

இதனிடையே, தனது எக்ஸ் பக்கத்தில். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரத் மாதா கி ஜே என பதிவிட்டு இந்திய இராணுவத்தினரின் நடவடிக்கை தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் போர்? பிரதமருடன் முப்படை தளபதி முக்கிய ஆலோசனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share