×
 

இந்தியாவுக்கு தார்மீக பொறுப்பு உண்டு! ஈரானிய கப்பல் விவகாரத்தில் கன்வால் சிபல் ஆவேசம்!

 இலங்கை அருகே ஈரானிய போர்க்கப்பல் IRIS Dena அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் கன்வால் சிபல் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவால் ஈரானிய போர்க்கப்பல் IRIS Dena தாக்கி மூழ்கடிக்கப்பட்ட விவகாரத்தில், இந்தியாவின் மௌனம் குறித்து முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் கன்வால் சிபல் (Kanwal Sibal) அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் அழைப்பை ஏற்று வந்த வீரர்களுக்கு நேர்ந்த கதிக்கு இந்தியா மனிதாபிமான ரீதியில் எதிர்வினை ஆற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் அழைப்பை ஏற்றுப் பயிற்சியில் பங்கேற்க ஈரானியக் கப்பல் இங்கு வந்திருக்காவிட்டால், அது அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்காது. இதற்கு இந்தியா அரசியல் அல்லது ராணுவ ரீதியாகப் பொறுப்பல்ல என்றாலும், தார்மீக மற்றும் மனிதாபிமான ரீதியில் ஒரு பெரும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியக் கடற்படையின் அணிவகுப்பில் பங்கேற்று, இந்தியக் குடியரசுத் தலைவருக்கு (ஜனாதிபதி) மரியாதை செலுத்திச் சென்ற ஒரு கப்பலை, இந்தியாவிற்கு மிக அருகில் வைத்து அமெரிக்கா தாக்கியிருப்பது இந்தியாவின் உணர்வுகளையும் மாண்பையும் அமெரிக்கா அலட்சியம் செய்ததையே காட்டுகிறது.

இதையும் படிங்க: எண்ணெய் தட்டுப்பாடு வராது! இந்தியா, சீனாவிற்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா அதிரடி முடிவு!

நமது நாட்டின் கௌரவத்தை மதித்து வந்த அந்த வீரர்களின் உயிரிழப்புக்கு, இந்தியக் கடற்படை ஒரு அதிகாரப்பூர்வ இரங்கல் செய்தியையாவது வெளியிடுவதே முறையான ராஜதந்திரம் மற்றும் மனிதாபிமானம் ஆகும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் சூழலுக்கு நடுவே, விசாகப்பட்டினத்தில் நடந்த கடற்பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பிய ஈரானியப் போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூலம் தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், 32 பேர் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை உயர்வு: இந்தியாவில் உயர்கிறதா பெட்ரோல், டீசல் விலை..?? வெளியான முக்கிய அப்டேட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share