×
 

பிளாக்கில் சிலிண்டர் விற்பனை... அநியாய கொள்ளை..!! புலம்பித் தவிக்கும் வியாபாரிகள்..!!

கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் GAS சிலிண்டர் தட்டுப்பாடு என்ற பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது உலக அளவிலான புவிசார் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய தாக்கம். முக்கிய காரணம் மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதை தடைபட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வணிக உபயோக சிலிண்டர்களின் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல உணவகங்கள் தற்காலிகமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு பதுக்கலைத் தடுக்கும் வகையில் முன்பதிவு விதிகளை கடுமையாக்கியுள்ளது.

முன்பு 21 நாட்கள் இடைவெளியில் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யலாம் என்றிருந்த நிலையில், தற்போது 25 நாட்கள் கட்டாய இடைவெளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓட்டல் சங்கங்கள் கடிதம் எழுதி உள்ளன. வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் வினியோகம் ரத்து செய்யப்பட்டதால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்களே கவனிங்க..!! வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் வினியோகம் நிறுத்தம்... இந்தியன் ஆயில் அதிரடி அறிவிப்பு..!!

ஆனால் கள்ளச் சந்தையில் சிலிண்டர் விற்பனை அதிகரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. கோவையில் வணிக சிலிண்டர் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஒரு சிலிண்டர் ரூ.3500-க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வணிக சிலிண்டர் புக்கிங் ரத்து செய்யப்பட்டதை அடுத்து வியாபாரிகள் தவித்து வரும் சூழ்நிலையில், சிலிண்டர் விலை உயர்வால் உணவு பொருட்களின் விலையும் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கவலை வேண்டாம்... மாணவர் விடுதிகளில் உணவு தட்டுப்பாடு வராது..!! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share