மக்களே கவனிங்க..!! வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் வினியோகம் நிறுத்தம்... இந்தியன் ஆயில் அதிரடி அறிவிப்பு..!!
சென்னையில் வணிக பயன்பட காண சிலிண்டர் சேவையை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது குறித்து தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்த அறிவிப்பு ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களை கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம், மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள போர் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடி ஆகும். இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் எல்பிஜி-யை பெருமளவு இறக்குமதி செய்யும் நிலையில், சப்ளை சங்கிலி தடைபடுவதால் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வணிக உபயோக சிலிண்டர்களின் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல உணவகங்கள் தற்காலிகமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு பதுக்கலைத் தடுக்கும் வகையில் முன்பதிவு விதிகளை கடுமையாக்கியுள்ளது.
இதையும் படிங்க: நெருக்கடி..!! சிலிண்டர் தட்டுப்பாடு... ஓட்டல்கள் சங்கம் பிரதமர், தமிழக முதல்வருக்கு கடிதம்..!!
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக உலக அளவில் கேஸ் சிலிண்டர் விநியோகத்தின் சங்கிலி பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படுவதாகவும் மாற்று எரிசக்தியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை கண்காணித்து வருவதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கடும் கட்டுப்பாடு..!! அடுப்பகரையிலும் சர்வதேச அரசியல்... MP சு. வெங்கடேசன் கருத்து..!!