GATE 2027 நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு! ஆகஸ்ட் 14 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
ஐஐடி மற்றும் என்ஐடி-க்களில் M.E, M.Tech படிப்புகளில் சேர்வதற்கான GATE 2027 நுழைவுத் தேர்வு அறிவிப்பை ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 14 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் பிப்ரவரியில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி (IIT) மற்றும் என்ஐடி-க்களில் (NIT) எம்.இ (M.E), எம்.டெக் (M.Tech) உள்ளிட்ட முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான புகழ்பெற்ற ‘GATE 2027’ (Graduate Aptitude Test in Engineering) நுழைவுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்த உயரிய நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் 2026 ஆகஸ்ட் மாதம் 3-வது வாரத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், உரிய ஆவணங்களுடன் தங்களது பதிவை ஆன்லைனில் மேற்கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து, இதற்கான நுழைவுத் தேர்வு 2027 பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளைப் பயில இந்த கேட் (GATE) மதிப்பெண் கட்டாயமாகும். அதுமட்டுமன்றி, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான (PSUs) BHEL, NTPC, IOCL போன்றவற்றில் உயரியப் பொறியாளர் பணிகளில் சேருவதற்கும் இந்த கேட் தேர்வு மதிப்பெண்களே முதன்மைத் தகுதியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான பொறியியல் பட்டதாரிகள் மற்றும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள், ஆகஸ்ட் மாதம் 3-வது வாரத்தில் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தங்களது பதிவுகளை மேற்கொள்ளலாம். பிப்ரவரி 2027-ல் கணினி வழியிலான (CBT) ஆன்லைன் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கியத் தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு!