×
 

கோல்டன் ஹாரிஸான்!! பிரம்மோஸை விட பயங்கர வேகம்!! பாக்., சீனா-வை அலறவிட இந்தியா களமிறக்கும் அரக்கன்!!

இஸ்ரேல் நாட்டின், 'கோல்டன் ஹாரிஸான்' ஏவுகணையை வாங்குவது குறித்து நம் நாடு தீவிரமாக ஆ லோசித்து வருகிறது.

இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் 'கோல்டன் ஹாரிசன்' (Golden Horizon) என்ற அதிநவீன ஏவுகணையை வழங்க முன்வந்துள்ளது. இந்த ஏவுகணை வாங்குவது குறித்து இந்தியா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 25) இரு நாள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார். அப்போது இந்த ஒப்பந்தம் இறுதியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோல்டன் ஹாரிசன் என்பது வான்வெளியில் இருந்து ஏவக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை (Air-Launched Ballistic Missile - ALBM). சுமார் 1,500 முதல் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. 

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை விட பல மடங்கு வேகமாக (ஹைப்பர்சோனிக் வேகம்) செல்லும். ஆழமான பதுங்கு குழிகள், வலுவூட்டப்பட்ட ராணுவ தளங்கள், அணு ஆயுத தளவாடங்கள் போன்றவற்றை கண்டுபிடித்து அழிக்கும் சக்தி பெற்றது.

இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பின் விஜயம்! மோடி செய்த மேஜிக்! இந்தியா - இஸ்ரேல் இடையே கையெழுத்தானது ராணுவ ஒப்பந்தம்!

வழக்கமான ஏவுகணைகள் தரைக்கு அருகில் பறந்து பின்னர் உயர்ந்து தாக்கும். ஆனால் கோல்டன் ஹாரிசன் ஆரம்பத்திலேயே உயரே பறந்து, பின்னர் மின்னல் வேகத்தில் இறங்கி தாக்கும். எதிரியின் ரேடார் கண்களில் சிக்காமல் செல்லும் திறன் உள்ளது. இதனால் எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுப்பது மிக கடினம்.

இந்த ஏவுகணையை இந்திய விமானப்படையின் சுகோய்-30 எம்கேஐ (Su-30MKI) போர் விமானங்களில் எளிதாக பொருத்த முடியும். இது இந்தியாவின் ஸ்டாண்ட்-ஆஃப் தாக்குதல் திறனை பெரிதும் மேம்படுத்தும். இஸ்ரேலின் ஸ்பாரோ (Sparrow) குடும்ப ஏவுகணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா ஏற்கனவே அக்னி ரக ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. அக்னி-5 போன்ற அணு ஆயுத ஏவுகணைகளை மேம்படுத்தி வரும் நிலையில், கோல்டன் ஹாரிசன் போன்ற ஏவுகணை வாங்குவது ராணுவ உத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.

இந்த ஒப்பந்தம் நடைபெற்றால், இந்தியாவின் வான் சக்தி புதிய உயரத்தை எட்டும். எதிரிகளுக்கு எதிரான தாக்குதல் திறன் பெருமளவு அதிகரிக்கும். பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் இந்திய-இஸ்ரேல் உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 15 நிமிடத்தில் 1,500 கி.மீ!! எதிரி கண்ணில் சிக்காமல் தாக்கும் சூரன்!! குடியரசு தினத்தில் அறிமுகமாகும் LRAShM!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share