9 ஆண்டுகளுக்கு பின் விஜயம்! மோடி செய்த மேஜிக்! இந்தியா - இஸ்ரேல் இடையே கையெழுத்தானது ராணுவ ஒப்பந்தம்!
பிரதமர் நரேந்திர மோடி, வரும் 25ம் தேதி இஸ்ரேல் செல்ல உள்ள நிலையில், இந்தியா - இஸ்ரேல் இடையே ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 25-ஆம் தேதி (பிப்ரவரி 25, 2026) இஸ்ரேலுக்கு இரு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பின் பேரில் நடைபெறும் இந்த பயணம், இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும்.
இந்த பயணத்தை முன்னிட்டு, இஸ்ரேலில் ராணுவ தொழில்துறை தொடர்பான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. இது இந்தியா-இஸ்ரேல் ராணுவ ஒத்துழைப்பை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும்.
இஸ்ரேல் ராணுவ அமைச்சகத்தின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பு இயக்குநரகம் (SIBAT), இந்திய ராணுவ உற்பத்தியாளர்கள் சங்கம் (SIDM) மற்றும் இந்திய ராணுவ அமைச்சகம் இணைந்து சமீபத்தில் கருத்தரங்கு மற்றும் நேரடி சந்திப்புகளை நடத்தின.
இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பின் மரண மாஸ் சம்பவம்!! நம்ம லிஸ்ட்லயே இல்லையே!! நெதன்யாகு அழைப்பில் இஸ்ரேல் பறக்கும் மோடி!
இதில் 30 இந்திய மற்றும் 26 இஸ்ரேலிய ராணுவ நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்கள் ஒன்றிணைந்து, இந்தியாவின் ராணுவ தொழில்துறை அமைப்பு, கொள்முதல் நடைமுறை ஆகியவை குறித்து பரஸ்பரம் அறிந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், நெருக்கடியான காலங்களில் தோள் கொடுத்து துணைநின்ற இரு நாடுகளின் ராணுவ தொழில்துறை இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பை வலியுறுத்துவதாகும்.
இதன் விளைவாக, இரு நாடுகளுக்கிடையே துறை சார்ந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த MoU எதிர்காலத்தில் கூட்டு ஆராய்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம், கூட்டு உற்பத்தி போன்றவற்றை ஊக்குவிக்கும்.
பிரதமர் மோடி இஸ்ரேலில் நெதன்யாகுவை சந்தித்து, பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவாக பேச உள்ளார். மேலும், இஸ்ரேலில் உள்ள இந்திய சமூகத்தினரையும் சந்தித்து உரையாற்ற உள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றமான க்னெசெட்டில் (Knesset) உரையாற்றுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-இஸ்ரேல் உறவு 2017-ல் மோடியின் முதல் பயணத்துடன் புதிய உயரத்தை எட்டியது. தற்போது நெதன்யாகு அழைப்பின் பேரில் நடைபெறும் இந்த பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான "தீவிர கூட்டணி"யை மேலும் உறுதிப்படுத்தும். ராணுவ ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை இந்த உறவின் மையமாக உள்ளன. இந்த MoU மூலம் இந்தியாவின் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்திற்கு இஸ்ரேலிய தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கும்.
இந்த பயணம் மேற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2026-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் இந்த உயர்மட்ட சந்திப்பு, இரு நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகளை திறக்கும்.
இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பின் மரண மாஸ் சம்பவம்!! நம்ம லிஸ்ட்லயே இல்லையே!! நெதன்யாகு அழைப்பில் இஸ்ரேல் பறக்கும் மோடி!