×
 

நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!

நீட் தேர்வு தொடர்பான விவாதத்திற்கு அரசு தயார் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நீட் (NEET) தேர்வு மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் குறித்து எந்தவொரு விவாதத்தையும் சந்திக்க மத்திய மோடி அரசு முழுத் தயார் நிலையில் உள்ளது என்று மத்திய உள்முறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எழுதியுள்ள கடிதத்தில் ஜனநாயக அமைப்பில் ஆரோக்கியமான விவாதம் மற்றும் உரையாடல் மூலமாக மட்டுமே எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். எனவே, அனைவரும் சுதந்திரமாகத் தங்களது கருத்துக்களை முன்வைக்க நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த சபாநாயகர் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மத்திய மோடி அரசு நாடாளுமன்றத்தில் அனைத்து வகையான விவாதங்களுக்கும் தயாராகவே உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளின் நோக்கம் விவாதிப்பது அல்ல; அவையில் கூச்சலிட்டு அமளியை உருவாக்கி அவையை முடக்குவது மட்டுமே ஆகும்.

இதையும் படிங்க: 17 நாட்களில் அதிரடி மாற்றம்! மத்திய உயர்கல்விச் செயலாளர் பதவியில் புதிய முகம்? யார் இந்த தீப்தி கவுர் முகர்ஜி?

எதிர்க்கட்சியினர் நீட் தேர்வு விவாதம் தொடர்பாக உடனடியாக மக்களவை சபாநாயகரிடம் முறைப்படி கடிதம் அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால், இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை தொடர்ந்து விவாதம் நடத்த நாங்கள் தயார். எதிர்க்கட்சியினர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், சந்தேகத்திற்கும் நாளை அவையிலேயே நான் விரிவாகப் பதிலளிக்கிறேன். அதன் பிறகு, யார் விவாதத்திற்குத் தயாராக இருக்கிறார்கள், யார் விவாதத்தை விட்டு ஓடுகிறார்கள் என்பதைப் பொதுமக்கள் தீர்மானித்துக் கொள்வார்கள் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி... நீட், FCRA திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தமிழக அரசு இன்று தீர்மானம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share