அவரு பாஜகவின் 'ஸ்லீப்பர் செல்'லுங்க.. சசி தரூரை போட்டு பொளக்கும் தோழர்கள்.!!
பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் இடம்பிடிக்க சசி தரூர் முயற்சி செய்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் இடம்பிடிக்க சசி தரூர் முயற்சி செய்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடு குறித்து உலகத் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்கர் பிரசாத், சசிதரூர், கனிமொழி உட்பட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழுவினர் பிரிட்டன், வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இப்பயணத்தில் இந்தியாவின் நிலை குறித்து விளக்க உள்ளனர்.
மேலும் இக்குழுக்களுக்கு ரவிசங்கர் பிரசாத், வைஜெ யந்த் பாண்டா (பாஜக), சசி தரூர் (காங்கிரஸ்), கனிமொழி (திமுக), சஞ்சய் குமார் ஜா (ஐஜத), சுப்ரியா சுலே (என்சிபி - சரத்பவார்), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகிய 7 எம்.பி.க்களும் அக்குழுக்களுக்குத் தலைமை வகிப்பார்கள். வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் இக்குழுவில் இடம்பெறுவார். குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இடம்பெற்றதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதையும் படிங்க: உயர்சாதிக்காரர் தலைவராகலாம், ஒரு முஸ்லிம் பிச்சைக்காரராக வேண்டுமா?.. விளாசிய ஒவைசி..!
இந்நிலையில் கேரள சிபிஐ செயலாளர் பினோய் விஸ்வம் சசி தரூரை கண்டித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு யுத்தத்தை பாஜக அரசியல் ஆதாய வேட்டையாகப் பயன்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் பாஜக ஸ்லீப்பிங் செல் இருப்பதாக ராகுல் காந்தி சொல்வது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. காங்கிரஸுக்குள் இருக்கும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் இடம்பிடிக்க சசி தரூர் முயற்சி செய்கிறார். பாஜகவுக்கு ஒவ்வொரு நகர்வையும் அரசியல் ஆதாயத்துக்காக எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துள்ளது” என அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சட்டப் போராட்டத்தில் ஒன்றுபடுவோம்..! 8 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..!