கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!
உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகானுக்கு அவரது மனைவி கதறி அழுது பிரியாவிடை கொடுத்தது காண்போரை கலங்கச் செய்தது.
உத்தரகாண்டில் இருந்து ஸ்ரீ கேதார்நாத் தாமிலிருந்து குப்தகாஷிக்கு ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. இந்த நிலையில் கௌரிகுண்ட் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் விமானி உட்பட ஆறு பயணிகள் பயணித்ததாக கூறப்படும் நிலையில், அவர்கள் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டது.
இந்த விபத்தில் துருதிஷ்டவசமாக விமானி உட்பட 7 பேரும் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டரை ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் ராஜ்வீர் சிங் சவுகான் இயக்கி இருந்தார். இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகானின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அப்போது, அவரது மனைவி லெப்டினன்ட் கர்னல் தீபிகா சவுகான் கண்ணீர் மல்க கணவருக்கு பிரியா விடைக் கொடுத்தார்.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து... ஏழு உயிர்கள் பறிபோன சோகம்!
தனது கணவரின் உடல் அருகே நின்று அவர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. மேலும், ராஜ்வீர் சிங் புகைப்படத்தை கண்ணீருடன் வருடி தீபிகா சவுகான் வருந்தியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!