×
 

வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 10 மாத பெண் குழந்தை! மாநிலத்தின் மகளாக அறிவிப்பு.. இமாச்சல் அரசு அதிரடி..!

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகாவை, மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்துல மண்டி மாவட்டத்துல இருக்குற தல்வாரா கிராமத்துல ஜூன் 30 மற்றும் ஜூலை 1-க்கு இடைப்பட்ட ராத்திரி ஒரு பயங்கர மேகவெடிப்பு நடந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரிய அழிவை உண்டாக்கிச்சு. இந்த சம்பவத்துல 10 மாத குழந்தை நீதிகா தன்னோட அம்மா, அப்பா, பாட்டியை இழந்து ஆதரவற்றவளா நிக்கிறா. 

நீதிகாவோட அப்பா ரமேஷ் (31) வெள்ளத்துல இறந்து போய்ட்டார். அவரோட உடல் கிடைச்சாலும், அம்மா ராதா தேவி (24) மற்றும் பாட்டி பூர்ணு தேவி (59) இன்னும் காணாம போயிருக்காங்க. அவங்க உடல்களும் இதுவரை கிடைக்கல. அந்த பயங்கரமான ராத்திரி, வீட்டுக்குள்ள தண்ணி புகுந்தப்ப, ரமேஷ் தண்ணியோட ஓட்டத்தை திருப்பி விட ஓடினார். அவருக்கு உதவி செய்ய ராதாவும், பூர்ணு தேவியும் வெளியே போனாங்க. ஆனா, மூணு பேருமே திரும்பி வரல. 

நீதிகா, வீட்டுக்குள்ள தனியா அழுதுட்டு இருக்குறதை அக்கம்பக்கத்து மக்கள், குறிப்பா பிரேம் சிங்க்னு ஒருத்தர் கண்டுபிடிச்சு, ரமேஷோட உறவினர் பல்வந்த்-கிட்ட ஒப்படைச்சார். பல்வந்த், முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்கூரோட பாதுகாப்பு அதிகாரியா வேலை பார்க்குறவர். 

இதையும் படிங்க: ஹிமாச்சலில் மேகம் பிளந்ததால் வீடுகளை அடித்து சென்ற வெள்ளம்.. பேய்மழைக்கு 69 பேர் பலி..

இப்போ நீதிகா, ரமேஷோட தங்கச்சி கிர்ணா தேவி வீட்டுல, ஷிகௌரி கிராமத்துல பாதுகாப்பா இருக்கா. இந்த கிராமம் தல்வாராவுல இருந்து 20 கிலோமீட்டர் தொலைவுல இருக்கு. கிர்ணா தேவி, “நீதிகாவை நானே என் பொண்ணு மாதிரி வளர்ப்பேன்”னு உறுதியா சொல்லியிருக்கா. இந்த சோகமான சம்பவத்தை அறிஞ்ச இமாச்சல பிரதேச அரசு, நீதிகாவை “மாநிலத்தின் குழந்தை”ன்னு அறிவிச்சு, முதல்வர் சுக்-ஆஷ்ரய் யோஜனா திட்டத்தின் கீழ் முழு பொறுப்பையும் ஏத்துக்கிச்சு. 

இந்த திட்டத்துல, நீதிகாவோட வளர்ப்பு, கல்வி, எதிர்கால செலவுகளை அரசே ஏற்கும். மாநில வருவாய் அமைச்சர் ஜகத் சிங் நேகி, “நீதிகா டாக்டராகணும், இன்ஜினியராகணும், இல்ல அதிகாரியாகணும்னு எதுவானாலும், அவளோட முழு செலவையும் அரசு பார்த்துக்கும்”னு உறுதியளிச்சிருக்கார். 

இந்த திட்டத்தின் கீழ், நீதிகாவுக்கு மாதம் 4,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். ஜூலை, ஆகஸ்ட் மாசங்களுக்கு 8,000 ரூபாய் ஏற்கனவே அவளோட வங்கி கணக்குல போடப்பட்டிருக்கு. இந்த உதவி அவ 27 வயசு ஆகுற வரை தொடரும். நீதிகாவோட கல்விக்காக இமாச்சல் கூட்டுறவு வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில ரெண்டு கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கு. இதுல பொதுமக்கள், தன்னார்வலர்கள் பணம் போட்டு உதவி செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. 

இந்த பணம், நீதிகா 18 வயசு ஆனதும் அவளோட கல்விக்கு பயன்படும். மேலும், 6-ம் வகுப்புக்கு பிறகு சைனிக் பள்ளியில சேர்க்கவும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. மாவட்ட ஆட்சியர் அபூர்வ் தேவ்கன், “அரசு இந்த குழந்தைக்கு அம்மா, அப்பாவா இருந்து பார்த்துக்கும்”னு சொல்லியிருக்கார். இந்த வெள்ளத்துல மண்டி மாவட்டத்துல 10 இடங்கள்ல மேகவெடிப்பு நடந்து, 14 பேர் இறந்து, 30 பேர் இன்னும் காணாம போயிருக்காங்க. 

நீதிகாவோட கதை, இந்த பேரழிவுல ஒரு சோகமான அதே சமயம், நம்பிக்கை தரும் கதையா இருக்கு. அவளை கிராமமே ஒரு குடும்பமா தத்தெடுத்து, அரசு முழு ஆதரவு தருது. இனி நீதிகாவோட எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்னு எல்லாரும் நம்புறாங்க.

இதையும் படிங்க: உங்க கட்சிக்காரங்க கல்லா கட்ட மக்களை காவு வாங்குவீங்களா? பூந்து விளாசிய அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share