வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடரும் அநீதி! ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்த கும்பல்!
வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ஆசிரியர் வீட்டுக்கு கும்பல் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றதிலிருந்து ஹிந்து சிறுபான்மையினர் மீதான வன்முறை தீவிரமடைந்து வருகிறது. கடந்த டிசம்பர் 1, 2025 முதல் ஜனவரி 15, 2026 வரையிலான 45 நாட்களில் மட்டும் குறைந்தது 15 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த காலகட்டத்தில் கொலை, கொள்ளை, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சூறையாடல், கோவில்கள் தாக்குதல், தீ வைத்தல், போலி மத குற்றச்சாட்டுகளின் பேரில் சித்ரவதை, பாலியல் வன்முறை முயற்சி உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்கள் நடந்துள்ளன.
குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 51 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தற்போது தலைதூக்கியுள்ள வன்முறையில் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மற்றொரு ஹிந்து குடும்பத்தின் வீடு குறிவைத்து தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 8வது கொலை!! வங்கதேசத்தில் மரண ஓலம்!! இந்துக்களுக்கு தொடர்ந்து அநீதி!!
சில்ஹெட் மாவட்டத்தின் கோவைங்காட் உபசிலாவில் உள்ள ஆசிரியர் பிரேந்திர குமார் டே (பிரபலமாக ஜுனு சார் என்று அழைக்கப்படுபவர்) என்பவரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கும்பலால் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டதால் வீடு முழுவதும் தீக்கிரையாகியுள்ளது.
குடும்பத்தினர் உயிர் தப்பியது அதிர்ஷ்டம் என்றாலும், இந்த சம்பவம் அங்குள்ள ஹிந்து சமூகத்தில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தில் தொடரும் இத்தகைய வன்முறைகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. ஹிந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து பல்வேறு அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.
இடைக்கால அரசு இத்தகைய தாக்குதல்களை கண்டிக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: சொல்ல முடியாத துயரம்!! சிறுபான்மையினர் எரித்துக்கொல்லப்படும் அட்டூழியம்!! ஷேக் ஹசீனா ஆவேசம்!