×
 

டெல்லி குண்டு வெடிப்பில் அடுத்த ஷாக்... பெண் மருத்துவரின் 'பகீர்' சூழ்ச்சி... திடீரென மாயமான 19 பெண்கள் ...!

டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர் 19 பெண்களை பயங்கரவாதத்திற்கு மூளைச்சலவை செய்துள்ள சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடித்ததில் 15 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக டெல்லி காவல்துறையும், தேசிய புலனாய்வு அமைப்பும் விசாரணை நடத்தி வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் ஹரியானாவில் செயல்பட்டு வரும் அல் ஃபலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த உமர் நபி எனும் மருத்துவர் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், கார் குண்டுவெடிப்பு நடந்த அன்று காலை பெண் மருத்துவர் ஷாகீன் என்பவர் வெடிபொருட்கள் வைத்திருந்ததாகவும், பயங்கரவாதிகள் உடன் தொடர்பில் இருந்ததாகவும் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்பு நடந்த பின் தொடர்ந்து பல மருத்துவர்கள் அதே கல்லூரியில் இருந்து கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: டெல்லியை அடுத்து தெலங்கானாவிலும் சதியா?... ரயில் நிலையம் அருகே நின்ற மர்ம கார்... சமீருக்கு வலைவீச்சு...!

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இயக்கத்தைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் ஷாஹித்துடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் கான்பூர் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 பெண்களை உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS), மத்திய புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல்துறையின் புலனாய்வாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெண் மருத்துவர் ஷாஹீன் சமூகத்தில் தனியாக வசிக்கக்கூடிய, வேலை இல்லாத மற்றும் சொந்த பிரச்சினைகளில் சிக்கித் தவிக்க கூடிய பெண்களை குறி வைத்து பயங்கரவாதத்திற்கு மாறும் வகையில் மூளை சலவை செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஷாஹீனின் வாய்ஸ் மெசெஜ்கள், வீடியோக்கள், சோசியல் மீடியா பாலோயர்கள், தொடர்பு பட்டியலில் இருப்பவர்களை தேர்வு செய்து உத்திரபிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த பெண்களின் பலர் தங்களது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டதால், அவர்களுடைய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, முகவரி, செல்போன் டவர் சிக்னல்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

காணாமல் போன 19 பெண்களைக் கண்டுபிடிப்பது, டாக்டர் ஷாஹீனின் பரந்த வலையமைப்பை முழுவதுமாக கண்டறிவும், , ஆட்சேர்ப்புச் சங்கிலிகளைக் கண்டறிதல் மற்றும் கருத்தியல் போதனையின் அளவை மதிப்பிடுவதில் முக்கியமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காஷ்மீர் டு டெல்லி... செங்கோட்டை அருகே வெடித்த காரின் பகீர் பிண்ணனி ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share