×
 

பிரம்மோஸ் ஏவுகணை அடி எப்படி இருக்கும்.? பாகிஸ்தானிடம் கேளுங்கள்.. யோகி ஆதித்யநாத் தெறி பேச்சு!

பிரம்மோஸின் வலிமை குறித்து பாகிஸ்தானியர்களிடம் கேளுங்கள் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

 பிரம்மோஸின் வலிமை குறித்து பாகிஸ்தானியர்களிடம் கேளுங்கள் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மைய திறப்பு விழா நடைபெற்றது.  இந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மையத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசினார். "தீவிரவாதத்தை அழிக்க வேண்டிய நேரம் இது. அதை செய்ய பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட வேண்டும்.



பிரம்மோஸ் ஏவுகணை என்றால் என்ன என்பதை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அதன் கிளிம்ப்ஸை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதை பார்க்காதவர்கள் பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமை குறித்து பாகிஸ்தானியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு தீவிரவாத செயலும் தேசத்துக்கு எதிரான போராகக் கருதப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்கும் வரை, இந்தப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் இருக்காது. அதை நசுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இதற்காக, முழு இந்தியாவும் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றுபட வேண்டும்.
தீவிரவாதத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் அதன் பாஷையில் பதில் கொடுக்க வேண்டும். அதற்கான மெசேஜை ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகத்துக்கு இந்தியா சொல்லியுள்ளது” என யோகி ஆதித்யநாத் விழாவில் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்'..! பாக்., விவகாரத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா விடுத்த எச்சரிக்கை..!

இதையும் படிங்க: காஷ்மீர் பிரச்சினையில் மூக்கை நுழைக்க விரும்பும் ட்ரம்ப்.. விழுந்து அடித்து வரவேற்கும் பாகிஸ்தான்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share