"மலையாய் குவிந்த பிரச்சனை"..! தேவையற்ற பேச்சு... அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய H.ராஜா..!
அமைச்சர் நிர்மல் குமார் பேச்சுக்கு H. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தவெக செய்வது மாற்று அரசியலா அல்லது தூற்று அரசியலா என பாஜக மூத்த தலைவர் H.ராஜா கேள்வி எழுப்பினார். அண்மையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ‘ மோடி, அமித்ஷா ஆகியோர் தங்கள் சொந்தக்காரர்களைக் கூட கவர்னர் பதவியில் அமர்த்தலாம்’ என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ள கருத்து வன்மையான கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.
உலகின் மாபெரும் ஜனநாயக நாடான பாரத நாட்டில் அது நிச்சயமாக சாத்தியமில்லை எனும் அடிப்படை கூட தெரியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார் என்று கண்டித்துள்ளார். காலம் காலமாக மக்கள் சேவையே மகேசன் சேவை என மிகவும் கடினமாக உழைத்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவதூறாய்ப் பேச அவருக்கு எப்படி மனம் வந்தது என புரியவில்லை என்று ஆதங்கத்தை கொட்டினார்.
பல்வேறு கட்சிகளுக்குள் கொள்கைகள் முரண்படலாம், மாற்றுக் கருத்துகள் இருக்கலாம், ஆனால் நாட்டின் பெரிய பதவியில் இருப்பவர்களை இப்படித்தான் பொய்யாகத் திரித்தும், முறையின்றியும் பேசுவதா? இது தவெக சொன்ன மாற்று அரசியலா அல்லது தூற்று அரசியலா? என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: "ரீல்ஸ் கோஷ்டி... போய் வேலைய பாருங்க"... Ex. அமைச்சர் TRB ராஜா விளாசல்..!
தவெக ஆட்சிக்கு வந்த இந்த 40 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், மின்சார வெட்டுக்கள், குடிநீர் தட்டுப்பாடுகள், பாலியல் கொடுமைகள் என மாநிலம் பூராவிலும் நாலாபுரத்திலும் பிரச்னைகள் மலையாய்க் குவிந்துள்ளது என்று குறிப்பிட்ட H.ராஜா, முதலில் இப்படிப்பட்ட அவசியமற்ற, பொறுப்பற்ற பேச்சுக்களை அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் மீறினால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: என்ன முதல்வரே இதெல்லாம்..? திருச்செந்தூர் கோவில் சேவை கட்டணம் உயர்வு..? நயினார் கண்டனம்..!!