×
 

பிரதமர் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்.. போட்டுடைத்த அமித்ஷா..!!

தாம் சிறை சென்றாலும் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 20ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்தார். இவற்றில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது, பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், யூனியன் பிரதேச அமைச்சர்கள் ஆகியோரை கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதாவாகும். இந்த மசோதாக்கள் அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, மற்றும் யூனியன் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா என சொல்லப்படுகின்றன.

இந்த மசோதாவின்படி, 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு 31வது நாளில் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர். இதற்கு தீர்ப்பு அல்லது நீதிமன்ற விசாரணை தேவையில்லை, இது எதிர்க்கட்சிகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மசோதாவின் நகல்களை கிழித்து எறிந்து, இது "ஜனநாயகத்தை சங்கிலியால் பிணைப்பது" என கடுமையாக விமர்சித்தனர்.

இதையும் படிங்க: பதவி பறிப்பு மசோதா!! இந்திராகாந்தி மாதிரி கிடையாது மோடி!! அமித்ஷா வக்காலத்து!

எதிர்க்கட்சிகள் இதை "ஓட்டு திருட்டு" பிரச்சனையை திசைமாற்றும் முயற்சியாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவும் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த அமித் ஷா, தான் கைது செய்யப்படுவதற்கு முன்பே பதவி விலகியதாகவும், மசோதா ஊழல் ஒழிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டது எனவும் தெரிவித்தார். இது அரசியலமைப்பு திருத்த மசோதாவாக இருப்பதால், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது. இந்த மசோதா நிறைவேறினால், இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்ய வகைசெய்யும் 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

மேலும் இந்த மசோதா ஜனநாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் என்றும், சிறையில் இருந்து நாட்டை வழிநடத்த முடியாது என்றும் கூறினார். "பிரதமராக இருந்தாலும், அவர்கள் பதவி விலக வேண்டும்," என அவர் வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அவர், அவர்களது ஆட்சியில் ஒழுக்கமின்மை காரணமாக மூன்று தேர்தல்களில் தோல்வியடைந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் ராகுல் காந்தியின் கூட்டணியை "இரட்டைவேடம்" என விமர்சித்தார்.

இந்த மசோதா நிறைவேறாத சூழலில், அதனை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்புவது என முடிவு செய்தோம். அரசும் இதனை முன்பே முடிவு செய்திருந்தது. இதன்படி, நாடாளுமன்ற மக்களவையின் 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையின் 10 உறுப்பினர்கள் என இரு அவைகளை சேர்ந்த மொத்தம் 31 உறுப்பினர்கள் இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம் பெறுவார்கள் என கூறியுள்ளார்.

நம்முடைய ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு அது ஏற்ற ஒன்றா? என அவர் கேட்டுள்ளார். பிரதமர் மோடி அவருக்கு எதிராகவே கூட இந்த அரசியல் சாசன திருத்தத்தினை கொண்டு வந்துள்ளார். அவர் ஒருவேளை சிறைக்கு சென்றால், அவரும் கூட பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என அமித்ஷா கூறியுள்ளார். இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: பதவி பறிப்பு மசோதா!! ஊழலை ஒழிக்க இதுவே வழி!! பீகாரில் கர்ஜித்த பிரதமர் மோடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share