×
 

இனி காரின் முன்பக்க கண்ணாடியில் FASTag - வெளியானது அதிரடி அறிவிப்பு...! 

அதை தளர்வாக வைத்திருப்பவர்கள் அல்லது கையில் வைத்திருப்பவர்கள் மீது இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று NHAI தெரிவித்துள்ளது. இது 'லூஸ் ஃபாஸ்டேக்' என்று அழைக்கப்படுகிறது.

உங்கள் வாகனத்தில் ஃபாஸ்டேக்கை சரியாகப் பொருத்தவில்லை என்றால், இப்போதே எச்சரிக்கையாக இருங்கள். அத்தகைய ஓட்டுநர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெளிவாகக் கூறியுள்ளது. காரின் விண்ட்ஸ்கிரீனில் ஃபாஸ்டேக்கை சரியாகப் பொருத்தாதவர்கள், அதாவது, அதை தளர்வாக வைத்திருப்பவர்கள் அல்லது கையில் வைத்திருப்பவர்கள் மீது இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று NHAI தெரிவித்துள்ளது. இது 'லூஸ் ஃபாஸ்டேக்' என்று அழைக்கப்படுகிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் முன்பக்க கண்ணாடியில் FASTag சரியாக ஒட்டப்படாமல் நுழையும் கார்களை பிளாக் லிஸ்ட் அல்லது ஹாட் லிஸ்டில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் வாகனத்தின் கண்ணாடியில் வேண்டுமென்றே FASTag-ஐ ஓட்டாமலோ அல்லது சரியாக ஒட்டாமலோ இருப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார் முன்பக்க கண்ணாடியில் வேண்டுமென்றே FASTag-ஐ பொருத்தாமல் இருப்பது சுங்கச்சாவடிகளில் தேவையற்ற தாமதங்களுக்கு வழிவகுக்கிறது.

இதையும் படிங்க: மூன்றே மாதங்களில் இவ்வளவு கோடி வசூலா? - மத்திய அரசின் அட்சய பாத்திரமான ஃபாஸ்டேக்...!

'லூஸ் ஃபாஸ்டேக்' என்பது வாகனத்தின் கண்ணாடியில் சரியாக ஒட்டப்படாத, ஆனால் ஓட்டுநரின் கையில் அல்லது எளிதாக ஸ்கேன் செய்ய முடியாத இடத்தில் வைக்கப்படும் ஃபாஸ்டேக் வாகனங்கள் குறித்து  சுங்கச்சாவடி நிர்வாகம் உடனுக்குடன் புகார் அளிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதற்காக ஒரு தனி மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. தளர்வான ஃபாஸ்டேக் குறித்த தகவல் கிடைக்கும்போதெல்லாம், அந்த ஃபாஸ்டேக் உடனடியாக கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் பணிகள் சீராக நடைபெறுவதற்கும், மக்கள் தேவையற்ற தாமதங்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லாததற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FASTag பயனர்களுக்காக புதிய வருடாந்திர பாஸ் அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பாஸ் மூலம், மக்கள் மீண்டும் மீண்டும் சுங்க கட்டணம் செலுத்தாமல் நேரடியாக பயணிக்க முடியும். FASTag வருடாந்திர பாஸ் என்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வாங்க வேண்டிய ஒரு பாஸ் ஆகும். இதன் விலை  3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் இதை ஆகஸ்ட் 15, 2025 முதல் வாங்கலாம். இந்த பாஸ் கார், ஜீப் மற்றும் வேன் போன்ற தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பாஸ் மூலம், நீங்கள் 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம் அல்லது ஒரு வருடத்திற்கு பயணம் செய்யலாம். இதற்கு முன்னதாக சுங்கச்சாவடி நடவடிக்கைகளை சீர்படுத்த இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: ரூ.3,000 வேண்டாம்.. ரூ.1500-ஆக குறையுங்க.. புதிய 'பாஸ்டேக்' அறிவிப்புக்கு ராமதாஸ் கருத்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share