×
 

ITR Filing 2025: 7 வகையான ஐடி ரிட்டன் படிவம் வெளியானது.. மாற்றங்கள் என்ன, கடைசி தேதி எப்போது?

வருமான வரி செலுத்துவோருக்கான 2025-26ம் நிதியாண்டுக்கான 7 வகையான ரிட்டன் படிவங்களை வருமான வரித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

வருமான வரித்துறை வருமான வரி செலுத்துவோருக்கான 2025-26ம் நிதியாண்டுக்கான 7 வகையான ரிட்டன் படிவங்களை இன்று வெளியிட்டுள்ளது. இந்த படிவங்கள் மூலம் 2024-25ம் ஆண்டுக்கான வருமானவரி ரிட்டன்களை தாக்கல் செய்யலாம்.

7 வகையான படிவங்கள்:

ஐடிஆர்-1 (சஹாஜ்) மற்றும் ஐடிஆர்-4 (சுகம்) படிவங்கள் என்பது சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கானது. ஐடிஆர்-1 என்பது, தனிநபர்கள் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் அந்த வருமானம் ஊதியமாகவோ, வீட்டின் வாடகை மூலமோ, வட்டி மூலமோ, சிறிய வேளாண் வருவாயாகவோ இருக்கலாம்.

இதையும் படிங்க: இந்தியா-பாக். பதற்றம்: நாடாளுமன்ற குழுவிடம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி 19ம் தேதி விளக்கம்..!

ஐடிஆர்-3 என்பது தனிநபர்களுக்கும், இந்து கூட்டுக்குடும்பத்துக்கும் (எச்யுஎப்) ஆகியோருக்கும், வர்த்தகம் மூலம் அல்லது வேலை மூலம் கிடைக்கும் வருவாயாகும். ஐடிஆர்-4 என்பது தனிநபர்கள், எச்யுஎப் மற்றும் நிறுவனங்கள் குறைந்த அளவுசொத்து மூலம் ரூ.50 லட்சம் வரை வர்த்தகம் மற்றும் தொழில்மூலம் வருவாய் ஈட்டுவோருக்கு பொருந்தும். வியாபாரம் மூலம் எந்த வருவமானமும் இல்லாமல், முதலீட்டு மூலம் வருவாய் ஈட்டுவோருக்கு ஐடிஆர்-2 படிவம் சரியானது.

ஐடிஆர்-5 என்பது நிறுவனங்கள், எல்எல்பி மற்றும் கூட்டுறவு சொசைட்டி பயன்படுத்தி ரிட்டன் தாக்கல் செய்யலாம். கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஐடிஆர்-6 படிவத்தையும், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் ஐடிஆர்-7 மூலம் கணக்குத் தாக்கல் செய்யலாம்.

மாற்றங்கள் என்ன?

இந்த ஆண்டு முதல் மாத ஊதியம் பெறுவோர், சிறிய வர்த்தகம் செய்வோர் நீண்டகால முதலீட்டு(பரஸ்பரநிதி, பங்குகள்) ஆதாயம் பெற்றால், அவர்கள்த தாக்கல் செய்யும் வருமான வரிரிட்டன் மாறுபடுகிறது. அதாவது முதலீட்டு ஆதாயம் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை இருந்தால், அவர்கள் ஐடிஆர்-1 அல்லது ஐடிஆர்-4 படிவத்தின் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ஐடிஆர்-2 படிவத்தில் தாக்கல் செய்தனர் அது குழப்பமாக இருந்ததால், இந்த ஆண்டு எளிமையாகவும், விரைவாகவும் தாக்கல் செய்ய ஐடிஆர்-1, 4 பயன்படுத்தப்படுகிறது.

வருமானவரிப்படி நீண்டகால ஆதாயத்தில் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை பங்குகள், பரஸ்பரநிதிகள் மூலம் பெறும் வருமானத்துக்கு வரிவிலக்கு உண்டு. ஆனால் ரூ.1.25 லட்சத்துக்கு மேல் லாபம் சென்றால் ஆண்டுக்கு 12.5% வரி செலுத்த வேண்டும். 

முதலீ்ட்டு ஆதாயத்தை குறிப்பிடுவோர் ஐடிஆர் -2,3,5,6 மற்றும்7 படிவங்களில் குறிப்பிடலாம். அதாவது சொத்துக்களை விற்பனை செய்தல் ஆகியவற்றை குறிப்பிடலாம். வருமான வரி செலுத்துவோர் தங்கள் ஐடி ரிட்டன் படிவத்தை ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரிசெலுத்துவோர் கணக்குகளை தணிக்கை செய்யத் தேவையில்லாத பட்சத்தில் விரைவாக தாக்கல் செய்வது சிறப்பாகும்.

இதையும் படிங்க: சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை பழிவாங்கி விட்டீர்கள்! வீரர்களுக்கு ராயல் சல்யூட் அடித்த பிரதமர்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share