சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை பழிவாங்கி விட்டீர்கள்! வீரர்களுக்கு ராயல் சல்யூட் அடித்த பிரதமர்...
விமானப்படை வீரர்களால் நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தீரத்துடன் சமர் புரிந்த நாயகர்களுடன் கலந்துரையாடினார். S400 விமானப்படை தடுப்பு அமைப்பின் முன்பு நின்று பிரதமர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது; பாரத் மாதா கி ஜே சொல்லும்போது எதிரிகள் நிலைகுலைந்து போனார்கள்.
விமானப்படை வீரர்கள் இந்தியாவை பெருமை அடையச் செய்து வரலாறு படைத்துள்ளனர். நமது நாட்டின் ட்ரோன்கள் பயங்கரவாதிகளை துல்லியமாக தாக்கியது. நாட்டுக்காக தங்களது இன்னுயிரை தர நமது வீரர்கள் தயாராக உள்ளனர். விமானப்படை வீரர்களின் வீர தீர செயல்கள் நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளது. நமது ராணுவம் ஏவிய ஏவுகணைகள் பாகிஸ்தானின் விமானப்படைத்தளத்தை தாக்கி சிதைத்தது. பாகிஸ்தானின் தாக்குதல்களை நாம் வெற்றிகரமாக கையாண்டோம். பாரத மாதா வாழ்க என்று முழக்கம் நாடு முழுவதும் ஒலித்தது. வீரத்துடன் சமர்ப் புரிந்த வீரர்களுக்கு சல்யூட்…
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி..! விமானப்படை வீரர்களை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்..!
அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக விமானப்படை வீரர்கள் உள்ளனர். விமானப்படை வீரர்களும் அதிகாரிகளும் வரலாறு படைத்துவிட்டனர். போரின் போது நாடெங்கும் பாரத் மாதா கி ஜே முழக்கம் தான் முழங்கியது. இந்தியாவின் வெற்றி குறித்து பேசும்போது ராணுவ வீரர்களின் வீரம் இதிகாசமாக பதிவு பெறும். சகோதரிகளின் நெற்றியில் உள்ள குங்குமம் அழிக்கப்பட்ட போது எதிரிகளுக்கு பாடம் புகட்டப்பட்டது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை பழிவாங்கி விட்டீர்கள்.
இந்தியாவின் வெற்றி குறித்து பேசும் போது நமது ராணுவ வீரர்களின் வீரம் போற்றப்படும். இனி பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்க முடியும் என பயங்கரவாதிகள் கனவிலும் நினைக்க முடியாது. பயங்கரவாதத்தை ஆதரித்தவர்கள் அதற்கான விலையை கொடுத்துள்ளார்கள். இந்தியாவின் பதிலடியால் பாகிஸ்தான் தூக்கம் தொலைத்துவிட்டது. இந்தியாவுடன் மோதினால் அழிவு நிச்சயம் என எதிரிகள் இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதையும் படிங்க: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை..! அமைதி உடன்படிக்கை குறித்து விவாதம்..!