×
 

இறக்குமதிக்கு கட்டுப்பாடு... வங்கதேசத்தின் பொருட்களுக்கு தடை! பட்டியலிட்ட மத்திய அரசு...

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு பொருட்களை நில சுங்கச்சாவடிகள் வாயிலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு பொருட்களை நில சுங்கச்சாவடிகள் வாயிலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தக துறையின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் எந்தவொரு நில சுங்கச்சாவடிகள் வழியாகவும் வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு அனுமதிக்கப்படாது., இருப்பினும் மகாராஷ்டிரத்தில் உள்ள நஹாவா ஷேவா, மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா கடல் துறைமுகங்கள் வழியாக அந்த இறக்குமதி அனுமதிக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

பழங்கள், பழச் சுவையூட்டப்பட்ட பானங்கள், பிற பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், மர அறைகலன்கள் ஆகியவற்றை அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா மற்றும் மிஸோரமின் என எந்தவொரு நில சுங்க நிலையங்கள் வழியாகவும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது என கூறியுள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரோவின் 101வது ராக்கெட் திட்டம் அவுட்.. தோல்விக்கு என்ன காரணம்..?

இதேபோல, அதே நில சுங்க நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் வழியாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு பருத்தி மற்றும் பருத்தி நூல் கழிவின் இறக்குமதி, சொந்த தொழில்களுக்காகப் பயன்படும் நிறமிகள், சாயங்கள், பிளாஸ்டிசைசர்கள் மற்றும் சிறு மணிகள் தவிர பிளாஸ்டிக் மற்றும் பிவிசி சரக்குகளின் இறக்குமதிக்கும் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மோதலில் இந்தியா எங்களை போட்டு பொளந்திடுச்சு.. மெளனம் கலைத்த பாகிஸ்தான் பிரதமர்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share