பாகிஸ்தானின் தாக்குதல்களை சுக்கு நூறாக்கிய இந்திய ராணுவம்.. இந்திய பதிலடியில் பொறி களங்கிய பாகிஸ்தான்!!
இந்தியாவின் விமானப் படைத் தளங்களை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தானுக்கு மரண அடியை இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது.
இந்தியாவின் விமானப் படைத் தளங்களை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தானுக்கு மரண அடியை இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எல்லையில் உள்ள இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு இந்தியாவும் சலிக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்திய மாநிலங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் விமானப்படை தளம் மீது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது. ஆனால், இந்தத் தாக்குதலில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பாகிஸ்தான் விமானப்படை தளங்களை இந்தியா குறி வைத்து தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர்கான் விமான படைத்தளம், பஞ்சாப் சார் கோர்ட்டில் உள்ள விமானப் படைத்தளம், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள முடீர் விமானப் படைத்தளம் மீது இந்தியா தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இந்திய போர் விமானங்களில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. ஆனால், இந்தத் தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று வழக்கம் போல் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது சவுத்ரி வாய்ச்சவடால் விட்டுள்ளார். இதற்கிடையே நேற்று முன்தினம் பாகிஸ்தான் தொடங்கிய ட்ரோன் தாக்குதல் நேற்று இரவும் நீடித்தது. இதுவரை பாகிஸ்தானின் நூற்றுக்கணக்கான ட்ரோன் தாக்குதல்களை இந்திய விமானப்படை நடுவானிலேயே மறித்து அளித்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய ட்ரோன்களை இதுனாலதான் நாங்க சுடவில்லை... பாக். அமைச்சரின் பகீர் விளக்கம்!!
குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, ரஜோரி மாவட்டங்களை நோக்கி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை இந்திய விமானப் படை உடனடியாக அழித்து பதிலடி கொடுத்தது. இதேபோல் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் 2 போர் விமானங்களை இந்திய விமானப் படை சுட்டு வீழ்த்தியது. மேலும் ராஜஸ்தான் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது பீரங்கி தாக்குதலையும் தொடங்கியுள்ளது. மேலும் இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பாக்-ன் தவறால் மாபெரும் வாய்ப்பு.. இந்தியாவுக்கு கிடைத்த சீனாவின் ரகசியங்கள்..! செம ட்விஸ்ட்..!