×
 

இந்தியா - நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்!! எழுந்த எதிர்ப்பு குரல்கள்!! ஒரே போஸ்டில் வாயை அடைத்த பிரதமர்!

இந்தியா உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், அதிக வேலைவாய்ப்புகள், வருமானத்தை உறுதி செய்யும் என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.

இந்தியாவும் நியூசிலாந்தும் அண்மையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் தொலைபேசி வாயிலாக உரையாடி இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தினர். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தால் இறக்குமதி வரிகள் குறைக்கப்படும், தொழிலாளர் விதிகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படும், பணி விசா வசதிகள் விரிவாக்கப்படும், இந்திய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வாய்ப்புகள் அதிகரிக்கும். குறிப்பாக, இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்தில் முழு வரிவிலக்கு அளிக்கப்படும். நியூசிலாந்து ஏற்றுமதி பொருட்களில் 95 சதவீதத்திற்கு வரிகள் குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக பாராட்டியுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் முதல் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவோம் என்று உறுதியளித்தோம். அதை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். 

இதையும் படிங்க: சக்சஸ்!! இந்தியா - நியூசிலாந்து ஒப்பந்தம் இடையிலான பேச்சு வெற்றி! ஏற்றுமதியில் அசத்தும் பயன்கள்! லிஸ்ட் இதோ!

இந்த ஒப்பந்தம் 140 கோடி இந்திய நுகர்வோருக்கு கதவுகளைத் திறக்கிறது. இதனால் நியூசிலாந்தில் அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருமானம், அதிக ஏற்றுமதி உறுதியாகும்" என்று கூறியுள்ளார்.

இருப்பினும், நியூசிலாந்தில் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்க்குரல்களும் எழுந்துள்ளன. வெளியுறவுத்துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், இந்திய மாணவர்களுக்கு அதிக சலுகைகள் அளிப்பதால் உள்ளூர் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு நெருக்கடி ஏற்படும் என்று விமர்சித்துள்ளார். இந்தியர்களுக்கு அதிக குடியேற்ற சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார உறவை வலுப்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சு!! போனிலே முடிந்த முக்கியமான டீல்! அதிகரிக்கும் ஏற்றுமதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share