தீவிரவாதிகளுக்கு அரசு மரியாதை.. பதிலடிக்கு மதச்சாயம்! பாகிஸ்தானை தோலுறித்த ராணுவ அதிகாரிகள்
தீவிரவாதிகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கை கழுவு நினைக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அரசு மரியாதை கொடுப்பதாக இந்திய பாதுகாப்புத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது; பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய அதே வீரியத்துடன் நாங்கள் பதிலடி கொடுத்தோம். எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை தவிர்த்து விட்டோம். பாகிஸ்தானில் பொதுமக்கள் யாரையும் இந்திய ராணுவம் தாக்கவில்லை.
தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக இந்தியா கூறிய போது பாகிஸ்தான் கண்டு கொள்ளவில்லை. தீவிரவாதம் தொடர்பான அனைத்து விசாரணைக்கும் தடையை ஏற்படுத்தியது பாகிஸ்தான். பிடிபடும் தீவிரவாதிகளின் முகவரியை கூட பாகிஸ்தானிடம் நாங்கள் கொடுத்தோம். பகல்காமில் நடைபெற்ற தாக்குதல் தான் இந்த பிரச்சனைக்கு மையப் புள்ளி. இந்தியா பதற்றத்தை உருவாக்குவோ அல்லது அமைதியை சீர் குலைக்கவோ விரும்பவில்லை. தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. தீவிரவாதத்திற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என கை கழுவ பார்க்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தானில் அதிக அளவில் தீவிரவாதிகள் உள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூர் என்பது முழுக்க முழுக்க தீவிரவாதிகளை குறி வைத்து மட்டுமே நடத்தப்பட்டது. தீவிரவாதம் குறித்த ஆதாரத்தை கொடுத்தும் கூட பாகிஸ்தான் நியாயப்படுத்தவே முயன்றது.
இதையும் படிங்க: எங்க பொறுமையை சோதிக்காதீங்க..! அடங்க மறுக்கும் பாகிஸ்தான்.. மிரளவிடும் இந்தியா..!
இந்திய ராணுவ முகாம்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானில் பொதுமக்கள் யாராவது கொல்லப்பட்டிருந்தால் ராணுவம் மரியாதை ஏன்? . இந்தியாவின் 15 இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தான் பகல்காம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட 12 இடங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. லாகூரில் உள்ள பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் சில தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி கரம் நீட்டுவதை போல் பேசி இருந்தனர்.
பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டன. அது தொடர்பான புகைப்படம் எல்லாவற்றையும் நாம் பார்த்தோம். இந்தியாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் டிஎன்ஏ உட்பட முழு விவரங்களையும் பாகிஸ்தானிடம் கொடுத்துள்ளோம். நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட இறுதி தீவிரவாதிகளின் இறுதிச்சடங்கில் கூட சில பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இந்தியா வேண்டுமென்றே மதத்தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால் இந்தியாவை பொருத்தவரை அவை முற்றிலும் பொய் என்பதை கூற விரும்புகிறோம். பாகிஸ்தான் கொடியை உயிரிழந்த தீவிரவாதிகள் மீது போர்த்தி அரசு மரியாதை வழங்கப்பட்டதையும் பார்க்க முடிந்தது. பிரச்சனையை பாகிஸ்தான் பெரிதாக நினைக்கிறது. தாங்கள் மதத்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறும் பாகிஸ்தான் தான், பூஞ்ச் பகுதியில் சீக்கிய மதத்தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எடுத்துள்ள இந்த பதில் நடவடிக்கை பொதுமக்களை தான் பாதிக்கிறது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 16 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டத்துடன் 59 பேர் காயமடைந்துள்ளனர்.பாகிஸ்தான் நேற்றிரவு இந்தியாவின் மீது வான்வழி தாக்குதல் நடத்த ஆயத்தமானது. இந்தியாவின் பொது நடவடிக்கைக்கு வகுப்புவாத சாயம் பூச பாகிஸ்தான் நினைக்கிறது. பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் கூட மதக் கண்ணோட்டம் இருந்ததை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் இந்த தாக்குதலை இந்தியாவில் உள்ள அனைத்து ஒன்றியங்களும் பிராந்தியங்களும் மதத்திற்கு அப்பாற்பட்டு கண்டித்துள்ளன. பதிலடி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் கூறுகிறது., ஆனால் இந்தியா நடத்தியது தான் உண்மையான பதிலடி தாக்குதல். இந்தியாவின் பதிலடி தாக்குதலின் போது பொதுமக்கள் குறிவைக்கப்படாமல் தீவிரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்டனர். பாகிஸ்தான் உள்நோக்கம் இந்தியாவில் வெற்றி பெற ஒருபோதும் விடமாட்டோம். பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு உரிய முறையில் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். நாங்கள் தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தினோம். பொதுமக்கள் வாழும் பகுதிகளை தாக்கவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கட்டு கதை கட்டுகிறது. தற்போது அழிக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் இந்திய எல்லையில் தாக்குதலுக்கான பகுதிகளுக்கும் உறுதியான இணைப்பு உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாகவும் தவறான தகவல் பரப்பப்பட்ட வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் வகையில் வேண்டுமென்றே நடந்து கொண்டது பாகிஸ்தான்தான். சிந்துநதி நீர் ஒப்பந்தத்தில் பல ஆண்டுகளாக இந்தியா பொறுமை காத்தது. தற்போது அந்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி தான் வைத்துள்ளது. சிந்து நதிநீரை பயன்படுத்துவதில் சட்டபூர்வமாக பல்வேறு பிரச்சனைகளை பாகிஸ்தான் ஏற்படுத்தி வந்தது. சிந்துநதி நீர் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இந்தியா மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களை கருத்தில் கொண்டு தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம். தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் என்ற பெயரை பாகிஸ்தான் பெற்றுள்ளது. உலகில் நடந்த பல்வேறு தாக்குதல்களை பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. தீவிரவாத அமைப்புகளின் இல்லமாக பாகிஸ்தான் உள்ளது. எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை நாம் மட்டும் அல்ல ஐநா குழுவை சேர்ந்தவர்களும் நேரில் ஆய்வு செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: கைமீறிய பிரச்சனை..! பாதுகாப்பே முக்கியம்.. நாடு திரும்ப அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்..!