ஜம்மு காஷ்மீர் குறித்து வாய்விட்ட பாகிஸ்தான்! வச்சு செய்த இந்தியா! ஐநாவில் காரசார விவாதம்!
ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்தது.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் முன்வைத்த கருத்துகளுக்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. கூட்டத்தின் போது இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், பாகிஸ்தானின் நிலைப்பாட்டை நேரடியாக மறுத்து கடுமையான பதிலடி அளித்தார்.
கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதிநிதி ஜம்மு காஷ்மீர் தொடர்பாக கருத்து தெரிவித்ததையடுத்து, இந்திய தரப்பு அதற்கு எதிராக வலுவான பதில் அளித்தது. இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் தேவையற்ற மற்றும் தவறான கருத்துகளை முன்வைத்துள்ளதாக கண்டனம் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும் என்றும், அது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் அவர் வலியுறுத்தினார். அது கடந்த காலத்திலும் இந்தியாவின் பகுதியாக இருந்தது, தற்போதும் அப்படியே உள்ளது, எதிர்காலத்திலும் அதே நிலை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இந்தியா குறித்து பாக்., அதிபர் திமிர் பேச்சு! உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை! மத்திய அரசு சுளீர் பதில்!
மேலும், ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தின் நோக்கத்தை மாற்றும் வகையில் பாகிஸ்தான் அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாகவும் இந்தியா குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தை சர்வதேச மேடையில் எழுப்புவது தேவையற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பர்வதனேனி ஹரிஷ், பாகிஸ்தான் பிரதிநிதி கூட்டத்தை அரசியல்மயமாக்கியதாகவும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான ஜம்மு காஷ்மீர் குறித்து தவறான கருத்துகளை முன்வைத்தது அதிர்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் ஐநா மேடையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கருத்து வேறுபாடுகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவின் கடும் பதில் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தகைய பிரச்சினைகளை சர்வதேச அமைப்புகளில் எழுப்புவது பயனற்றது என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூர் 2.0க்கு தயாராகும் இந்தியா! அடுத்தக்கட்ட போருக்கு ரெடி! ராணுவ தளபதி உபேந்திர திவேதி அதிரடி!