×
 

லடாக்கில் இந்தியாவின் புதிய நீர் திட்டம்!! பாகிஸ்தானுக்கு அதிரடி செக்! அடுத்தடுத்து உருவாகும் புதிய அணைகள்!

இந்த நிலையில், உப்ஷி பகுதியில் ஆற்றின் குறுக்கே இயற்கையான பாறாங்கற்களை பயன்படுத்தி தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.

லடாக்: சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், லடாக்கில் சிந்து நதியின் குறுக்கே 10 அடி உயர தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உப்ஷி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தடுப்பணை மூலம் நீரை சேமித்து, விவசாயத்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்படாது என இந்தியா தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இந்திய எல்லைக்குள் கிடைக்கும் சிந்து நதி நீரை உள்நாட்டு தேவைகளுக்கு அதிகமாக பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பல ஆண்டுகளாக வசந்த காலங்களில் நீர்மட்டம் குறைவதால் லடாக்கின் சில பகுதிகளில் விவசாயிகள் சிரமங்களை சந்தித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் 17 நாள் போர் பயிற்சி! இந்திய விமானப்படை அறிவிப்பால் அதிகரித்த பதற்றம்!

இந்த நிலையில், உப்ஷி பகுதியில் ஆற்றின் குறுக்கே இயற்கையான பாறாங்கற்களை பயன்படுத்தி தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. சிமென்ட் பயன்படுத்தாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த தடுப்பணை சுமார் 10 அடி உயரம் கொண்டதாகவும், அதில் சுமார் 4 கோடி லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிக்கப்படும் நீரை பாசனக் கால்வாய்கள் மூலம் வறட்சியால் பாதிக்கப்படும் கிராமங்களுக்கு கொண்டு சென்று விவசாயத்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய நிலங்களுக்கு தேவையான நீரை வழங்குவதுடன், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிந்து நதி பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு முன்பாக இந்தியப் பகுதிகளில் நீரை பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக லடாக் நிர்வாகம் சிந்து நதியின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற தடுப்பணைகளை அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான திட்டமிடல், நிதி ஒதுக்கீடு மற்றும் அடுத்தகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், சிந்து நதிநீர் விவகாரம் ஒருபுறம் தொடரும் நிலையில், மறுபுறம் லடாக்கில் நீரை சேமித்து உள்ளூர் தேவைகளுக்கு பயன்படுத்தும் உள்கட்டமைப்பு நடவடிக்கைகளும் கவனம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: பாக்., பிரதமரின் பித்தலாட்டம்? மோடி, புடின், ஜின்பிங் எங்கே? வைரலான புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share