×
 

20% பாக். விமானப்படை தளம் காலி... தாக்குதல் பற்றி விளக்கமளித்த இந்திய விமானப்படை!!

பாகிஸ்தானின் விமானபடை தளத்தை அடித்து நொறுக்கியிருப்பதாக இந்தியா விமானப்படை தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

கடந்த 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய விமானப்படை லாகூரில் உள்ள ஒரு ரேடார் தளத்தை தாக்கியது. இந்த விமானப்படை தளத்தை பாதுகாக்க பாகிஸ்தான் இந்த HQ-9 வான் பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்தியிருந்தது. 100-200 கி.மீ சுற்றுவட்டாரத்தில் எந்த விமானம்/எவுகணைகள் வந்தாலும் அதை தாக்கி அழிக்கும் திறன் இந்த வான் பாதுகாப்பு அம்சத்திற்கு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதனை இந்திய விமானப்படை அடித்து நொறுக்கியிருக்கிறது. இதனை விமானப்படையின் செயல்பாட்டு இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: அனைத்தையும் அழித்துவிட்டோம்; எதிர்கால மிஷன்களை மேற்கொள்ள தயார்.. இந்திய ராணுவம் அதிரடி!!

லாகூர் ரேடார் தளம் மட்டுமல்லாது கராச்சியில் உள்ள மாலிர் கன்டோன்மென்ட் மீதும் தாக்குதல் நடதப்பட்டிருப்பதை நேற்று மாலை நடந்த கூட்டத்தில் பாரதி விவரித்ததாக கூறப்படுகிறது. மாலிர் கான்ட் என்பது கராச்சி நகரத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள ஒரு இராணுவத் தளமாகும். இந்த கன்டோன்மென்ட்டில் பாகிஸ்தான் தனது வான் ஏவுதளத்தை வைத்திருந்தது. இந்த இரண்டு தவிர, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலாவுக்கு அருகில் உள்ள மற்றொரு இடத்தையும் இந்திய விமானப்படை குறி வைத்ததாகவும் பாரதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் கடற்படையை ஒடுக்குவதற்கு நமது போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடற்படை விமானங்கள் கராச்சி துறைமுகத்திற்கு வெளியே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்று வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் தெரிவித்தார். மேலும், தாக்குதல் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில், இந்திய கடற்படை முழு தயாரிப்புடன் ரெடியாக இருந்தது. எனவேதான அவர்களால் திருப்பி நம்மை தாக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய விமானப்படை பாகிஸ்தானின் F-16 மற்றும் JF-17 ரக விமானங்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறது. மட்டுமல்லாது பாகிஸ்தான் விமானப்படை தளத்தில் சுமார் 20%ஐ தாக்கி அழித்திருக்கிறது.

இதையும் படிங்க: போர் நிறுத்தம் என்ன ஆனது? பொங்கி எழுந்த உமர் அப்துல்லா... காதை கிழிக்கும் வெடி சத்தங்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share