வான் பாதுகாப்பே ஆப்ரேஷன் சிந்தூரின் பிரதான கேடயம்.. தேவைப்பட்டால் மீண்டும் ஒரு ஆபரேஷன்! முப்படை அதிகாரிகள் உறுதி..!
பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளின் வீடியோவை அதிகாரிகள் வெளியிட்டனர்
ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் ராஜீவ் காய், ஏகே பார்தி, பிரமோத் உள்ளிட்டோர் பேட்டியளித்தனர். ஆப்ரேஷன் சிந்து குறித்து முப்படை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது நமது சண்டை பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆனது அல்ல பயங்கரவாதிகளுடன் ஆனது. பயங்கரவாதிகளின் நிலைகள் தான் இந்திய ராணுவத்தின் எதிரி, பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை.,
தீவிரவாதிகளை தான் குறி வைத்தது. எல்லையை பாதுகாக்க அனைத்து வகையிலும் இந்திய ராணுவம் உறுதி போன்றது. பாகிஸ்தான் ரூல்களை இந்திய வான்ப பாதுகாப்பு அமைப்பு தகர்த்தது. உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு ட்ரோன் அழிப்பில் முக்கிய பங்காற்றியது. பாகிஸ்தானில் ஏற்பட்ட சேதாரங்களுக்கு பாகிஸ்தான் மட்டுமே பொறுப்பு. இந்திய வான் படையால் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளோம்.
பயங்கரவாதிகள் தான் நமது இலக்கு ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டது. ஆப்ரேஷன் சிந்தூரில் வான் பாதுகாப்பு அமைப்பு பிரதான கேடயமாக செயல்பட்டது. கராச்சி லாக்கூர் உள்ளிட்ட விமானப்படை தளங்கள் மீதும் தாக்குதல். தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக இலக்குகள் துல்லியமாக தீர்மானிக்கப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. நள்ளிரவில் நமது தாக்குதல் நடத்தப்பட்டாலும் அமைப்பின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.
இதையும் படிங்க: தீவிரவாத நடவடிக்கை எதிர்ப்பு..! இந்தியா - பாக். இடையிலான பேச்சுவார்த்தை தொடக்கம்..!
இந்தியாவின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பில் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. பாகிஸ்தான் பயன்படுத்திய சீன ஏவுகணைகளையும் இந்தியா தாக்கி அளித்தது. பாகிஸ்தானோட நாலை சண்டையில் இந்தியாவிற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பாகிஸ்தான் நிலைகளை தாண்டாமலேயே இந்தியா அவர்களின் ராணுவ நிலைகளை அழித்தது. பாகிஸ்தானின் விமானப்படை தலங்கள் தாக்கப்பட்ட தருணத்தில் இந்திய தலங்கள் பாதுகாப்பாக இருந்தன. எல்லையில் உள்ள அப்பாவி மக்களை குறி வைத்தது தான் பாகிஸ்தானின் ஷெல் தாக்குதல். முழு அளவில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டது.பகல்காம் தாக்குதல் நடந்த உடனேயே இந்திய கடற்படை விமானம் தாங்கிக்கப்பல் உஷார் நிலையில் வைக்கப்பட்டது.
எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் ஒரு ஆப்ரேஷனை கொடுக்க தயாராக இருக்கிறோம். மூன்று மணி நேரத்தில் பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள் மீது அதிரடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. எதிரி நாட்டு எந்த போர் விமானங்களையும் இந்தியாவின் எல்லைக்கு அருகில் கூட அனுமதிக்கவில்லை. பாகிஸ்தான் உடனான போரில் அனைத்து உளவுப்படை கடற்படை சேகரித்துக் கொடுத்தது.. ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் வெற்றிகரமாக நடைபெற முக்கிய பங்களித்தது இந்திய கடற்படை. இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதையும் படிங்க: போர் பதற்றத்தில் மூடப்பட்ட விமான நிலையங்கள்..! முன்கூட்டியே திறக்க அதிரடி உத்தரவு..!