கெடு விதித்த மத்திய அரசு... ரூ.827 கோடியை பயணிகளுக்கு திருப்பி வழங்கிய இண்டிகோ நிறுவனம்...!
விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 827 கோடி ரூபாயை பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் திரும்பி வழங்கி உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) தனது நடவடிக்கைகளில் மிகப்பெரிய சீர்குலைவை சந்தித்தது. இது இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கறையாக அமைந்துள்ளது, ஏனென்றால் இந்த சம்பவம் ஆயிரக்கணக்கான பயணிகளை தவிக்கவிட்டது. நாடு முழுவதும் கடந்த ஒரு வார காலமாக இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் கடும் அவதிக்குள்ளான பயணிகள் அவதி அடைந்தனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்து இருந்தனர். விமானிகளுக்கான புதிய விதிகளை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கத்தால் இண்டிகோவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
பணியாளர்கள் பிரச்சனையால் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு இதுவரை ரூ.827 கோடியை இண்டிகோ நிறுவனம் திருப்பித் தந்ததாக தெரிவித்துள்ளது. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், இன்று நாடு முழுவதும் சுமார் 1800 இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது. புதிய விதிகளை DGCA வாபஸ் பெற்றதை அடுத்து இண்டிகோ நிறுவனத்தின் சேவை சீராகத் தொடங்கியது.
இதையும் படிங்க: போலாம் ரைட்..!! மீண்டும் தொடங்கிய இண்டிகோ விமான சேவை..!! பயணிகள் சற்று நிம்மதி..!!
பயணிகளுக்கு டிக்கெட் தொகையை திருப்பித்தந்த இண்டிகோ 48 மணி நேரத்தில் பயணிகளின் 4,500 உடைமைகளை திருப்பித்தந்ததாக தெரிவித்து உள்ளது. பயணிகளின் 9,000-க்கும் மேற்பட்ட லக்கேஜுகளில் 4,500 லக்கேஜ்கள் திருப்பி தரப்பட்டதாக இண்டிகோ விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: இண்டிகோ விமான சேவை நெருக்கடி எதிரொலி..!! புதிய விதிகளை திரும்பப் பெற்றது DGCA..!!