கவலை வேண்டாம்! பாதுகாப்பான கைகளில் இந்திய நண்பர்கள்!! ஈரான் தூதரகம் தந்த வாக்குறுதி!
இந்திய நண்பர்கள் மிகவும் பாதுகாப்பான கைகளில் உள்ளனர், கவலை வேண்டாம் என இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
தெஹ்ரான் / புது டெல்லி: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் முழுமையான பாதுகாப்பில் இருப்பதாக ஈரானுக்கான இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில், “இந்திய நண்பர்கள் மிகவும் பாதுகாப்பான கைகளில் உள்ளனர். அவர்கள் குறித்து எந்த கவலையும் வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிகப்பெரிய ஆறுதல்! மேலும் 2 கப்பல்கள் பெட்ரோலிய பொருட்களுடன் இந்தியா வருகை!
ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக், பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றன. உலக எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது. கடந்த மாதத்திலிருந்து மிகக் குறைவான கப்பல்களே அனுமதிக்கப்படுவதால், உலக அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை மூடல் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், ஈரான் தூதரகம் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து உறுதியளித்துள்ளது. இந்திய அரசும் அங்கு வசிக்கும் இந்தியர்களின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் தொடரும் இந்தப் போர் பதற்றம் உலகப் பொருளாதாரத்தையும், எரிசக்தி துறையையும் பெரிதும் பாதிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியா போன்ற நாடுகள் மாற்று எண்ணெய் இறக்குமதி வழிகளைத் தேடி வருகின்றன.
ஈரானில் தற்போது சுமார் 9,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து இந்திய அரசு தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது.
இதையும் படிங்க: தரைவழி தாக்குதல் தேவையே படாது!! ஈரானை ஈசியா ஜெயிச்சிருவோம்!! அமெரிக்க அமைச்சர் அசால்ட் பதில்!