×
 

இஸ்ரேல் தலையில் இடியை இறக்கிய ஈரான்! பதிலுக்கு பதில்!! அணுசக்தி நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்!

தெற்கு இஸ்ரேலில் உள்ள அணுசக்தி நிலையத்திற்கு அருகிலுள்ள டிமோனா நகரை ஈரான் ஏவுகணைத் தாக்குதல் தாக்கியுள்ளது. நடான்ஸ் அணுசக்தி மையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் அணுசக்தி தொடர்பான இலக்குகளை நேரடியாகத் தாக்கும் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளன. 

ஈரான், தெற்கு இஸ்ரேலில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையத்துக்கு அருகிலுள்ள டிமோனா நகரை பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கியுள்ளது. இதேவேளை, இஸ்ரேல் ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் தளமான நடான்ஸ் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் தரப்பில், இஸ்ரேலின் நடான்ஸ் தாக்குதலுக்கு பதிலடியாகவே டிமோனா தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்போ, டிமோனா மற்றும் அராட் நகரங்களில் ஈரானிய ஏவுகணைகள் விழுந்ததாக ஒப்புக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: பிரிக்ஸ் நடுநிலையா செயல்படணும்! போரை நிறுத்த இந்தியாவுக்கு அழுத்தம் தரும் ஈரான்! தர்மசங்கடத்தில் மோடி!

தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலில் மொத்தம் 108 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 37 பேர் லேசான காயத்துடனும், 10 வயது சிறுவன் ஒருவர் உள்பட சிலர் கவலைக்கிடமான நிலையிலும் இருப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) இந்தத் தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக அறிவித்துள்ளது. நடான்ஸ் தளத்துக்கு வெளியே கதிரியக்க அளவு அதிகரிப்பு இல்லை என்றும், டிமோனா அணுசக்தி மையத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது. ஆனால் இரு நாடுகளும் அணுசக்தி தொடர்பான இலக்குகளைத் தாக்கியது உலக அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி ஏவுகணைகள் எப்படி உள்ளே நுழைந்தன என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்தப் போர் தொடங்கியதில் இருந்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட தலைவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேற்காசியப் பிராந்தியம் முழுவதும் போர் பதற்றம் உச்சத்தில் உள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் இந்த அணுசக்தி தாக்குதல் சம்பவத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. மேலும் தாக்குதல்கள் தொடர்ந்தால், பிராந்தியப் போர் உலகப் போராக மாறும் அபாயம் உள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈரானின் ஏவுகணை தயாரிக்கும் திறன் காலி! போர் விரைவில் முடியும்! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share