×
 
☰

சவுரவ் தாஸ் இந்தியரா? உள்துறை விசாரணை கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் இந்தியாதானா என்பது குறித்து விசாரிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) இணை ஒருங்கிணைப்பாளரும் பத்திரிகையாளருமான சவுரவ் தாஸ் இந்தியக் குடிமகன்தானா என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உரிய விசாரணை நடத்த உத்தரவிடக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள சவுரவ் தாஸ், நீதிமன்ற நிர்வாகம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்துத் தனது எக்ஸ் (ட்விட்டர்), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ச்சியாக அவதூறான கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்.

அவரது பின்னணி மற்றும் குடியுரிமை குறித்துச் சந்தேகம் எழுந்துள்ளதால், அவர் இந்தியரா அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவரா என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் விரிவாக விசாரிக்க வேண்டும். இந்த விசாரணையில் அவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையும் படிங்க: ஜந்தர் மந்தர் போராட்டம்: கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோர் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, அடுத்த 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பெரம்பூர் தேர்தல் வழக்கு! முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share