×
 

இஸ்ரேல் வாங்க மோடி ஜி!! காசா புனரமைப்பு பணியில் மௌனம் காட்டும் இந்தியா! நெதன்யாகு அழைப்பு!

காசா புனரமைப்பு பணிக்காக, அமெரிக்கா சார்பில் சர்வதேச அமைதி வாரியம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியை இஸ்ரேலுக்கு வரும்படி, அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

புதுடில்லி: காசா பகுதியில் நீண்டகால அமைதியை ஏற்படுத்தி, போரால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டமைக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சர்வதேச அளவில் 'போர்டு ஆஃப் பீஸ்' (Board of Peace) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தின் மூலம் காசாவில் அமைதி நிலைநாட்டுதல், புனரமைப்பு பணிகள், மனிதாபிமான உதவிகள் உள்ளிட்டவற்றை மேற்பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த அமைதி வாரியத்தில் இணையுமாறு இந்தியா உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இதற்கு ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா இதுவரை எந்த அதிகாரபூர்வ பதிலும் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

இந்தியாவின் இந்த அணுகுமுறை, இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதலில் நீண்டகாலமாக பின்பற்றி வரும் சமநிலை கொள்கையை பிரதிபலிப்பதாக விவரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் அரசு பிரதமர் நரேந்திர மோடியை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பு காசா புனரமைப்பு தொடர்பான விவாதங்கள் மற்றும் 'போர்டு ஆஃப் பீஸ்' அமைப்பில் இந்தியாவின் சாத்தியமான பங்கேற்பு குறித்து பேசுவதற்காக விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: போர் நிறுத்ததின் அடுத்த கட்டம்!! காசா அமைதி வாரியத்தை அமைப்பதாக அறிவித்தார் ட்ரம்ப்!

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அரசு அழைப்பு விடுத்தது உண்மைதான். ஆனால் பயணத்தின் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை" என்றார். சில தகவல்களின்படி, இந்த பயணம் அடுத்த மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே இந்த 'போர்டு ஆஃப் பீஸ்'க்கு இணைந்துள்ள நிலையில், இந்தியாவின் பங்கேற்பு மேற்காசிய அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 

இந்தியா-இஸ்ரேல் உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக வலுப்பெற்று வரும் சூழலில், காசா பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது. இதேவேளை, இந்தியாவின் உள்நாட்டு அரசியல் கட்சிகள் சில, டிரம்பின் இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையை மீறி செயல்படும் முயற்சி என்று விமர்சித்து வருகின்றன.

பிரதமர் மோடியின் சாத்தியமான இஸ்ரேல் பயணம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 5.34 லட்ச ரூபாய் அபராதம்!! கட்ட தவறியதால் சிறை!! இலங்கை கோர்ட் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share