கண்துடைப்பு நாடகம் கூடாது!! பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருப்பதா? ஜெய்சங்கர் காட்டம்!
பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருப்பதோ, கண்துடைப்பு நாடகம் ஆடுவதோ கூடாது' என நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உலக நாடுகளை வலியுறுத்தி உள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். "பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை காட்ட வேண்டும். அதற்கு எந்த நியாயமும் கற்பிக்கக்கூடாது. கண்டும் காணாமல் இருப்பது, கண்துடைப்பு நாடகம் ஆடுவது போன்றவை போதும்" என்று அவர் வலியுறுத்தினார்.
நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த SCO தலைவர்கள் கூட்டத்தில் ஜெயசங்கர் பேசினார். அங்கு அவர் கூறியது: "பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீமைகளை ஒழிக்கவே SCO உருவாக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டுகளில் இந்த அச்சுறுத்தல்கள் இன்னும் அதிகரித்துள்ளன. இந்தியா தனது மக்களைப் பாதுகாக்க உரிமை உண்டு. அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். மற்ற நாடுகளும் அதைச் செய்ய வேண்டும்."
தொடர்ந்து, "மாறி வரும் உலக நிலவரத்துக்கு ஏற்ப SCO அமைப்பை மாற்றியமைக்க வேண்டும். அதன் நிகழ்ச்சி நிரலை விரிவுபடுத்த வேண்டும்" என்றும் ஜெயசங்கர் கூறினார். இந்தியாவின் இந்த நிலைப்பாடு, டெல்லி ரெட் ஃபோர்ட் கார் குண்டுவெடிப்பு போன்ற சமீபத்திய சம்பவங்களுக்குப் பிறகு வந்துள்ளது.
இதையும் படிங்க: மோடியை மறக்க மாட்டோம்! பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம்; இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதி!
SCO கூட்டத்தில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜெயசங்கர் இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைச் சந்தித்து, வருடாந்திர இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டு முன்னேற்பாடுகள் குறித்தும் பேசினார்.
இந்தியாவின் இந்த வலியுறுத்தல், உலக அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஜெயசங்கரின் பேச்சு, SCO அமைப்பின் அடிப்படை நோக்கத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
இதையும் படிங்க: கேடுகெட்ட ஆட்சி... காட்டாட்சி..! கடிவாளம் போடுவோம் முதல்வரே... நயினார் உறுதி...!