×
 

26 ஆண்டுகளாக அழியாத வீர வரலாறு!! கார்கில் வெற்றி நாளில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சலி!

கார்கில் போரில் இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். கார்கில் போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கார்கில் வெற்றி நாளையொட்டி, 1999-ஆம் ஆண்டு கார்கில் போரில் இந்தியாவின் இறையாண்மையை காக்க உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். வீரர்களின் தியாகமும் நாட்டுப்பற்றும் என்றென்றும் இந்திய மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1999-ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் இந்திய ராணுவம் வீரத்துடன் போராடி வெற்றி பெற்றது. அந்தப் போரில் உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

கார்கில் வெற்றி நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “இந்தியாவைப் பாதுகாப்பதில் அளப்பரிய துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய நமது வீரர்களுக்கு நாடு முழுவதும் நன்றி செலுத்துகிறது.

இதையும் படிங்க: புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி கூறிய முக்கிய தகவல்! கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை!

மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் அவர்கள் வெளிப்படுத்திய வீரமும் உறுதியும் இந்தியாவின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும். அவர்களின் நாட்டுப்பற்றும் கடமை உணர்வும் வருங்கால தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, லடாக்கில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரை அர்ப்பணித்த அனைத்து வீரர்களுக்கும் தலைவணங்குகிறேன். கார்கிலின் மலைப்பகுதிகளில் 1999-ஆம் ஆண்டு அவர்கள் வெளிப்படுத்திய வீரமும் தியாகமும் இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலும் உறுதியும் வருங்கால சந்ததியினருக்கு என்றும் ஊக்கமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கார்கில் வெற்றி நாள் முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பல அமைப்புகள் அஞ்சலி செலுத்தியதுடன், சமூக வலைதளங்களிலும் #KargilVijayDiwas என்ற ஹேஷ்டேக் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்காக உயிர்தியாகம் செய்த வீரர்களின் சேவையை நினைவுகூரும் நாளாக கார்கில் வெற்றி நாள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி செல்பி வீடியோ... ஒரே நாளில் 10 லட்சம் புதிய Followers, 30.5 கோடி Views! இன்ஸ்டாகிராமில் வெடித்த வைரல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share