தமிழக - கர்நாடகா எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... களத்தில் இறங்கிய போலீஸ் படை- நடப்பது என்ன?
கர்நாடக அரசு மேகதாதுவில் உடனடியாக அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று பந்த்
தமிழக அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் இடையே காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக இரு மாநில அரசுகளும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு விவசாயிகள் மற்றும் அரசு சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து, இன்று கர்நாடக அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், கர்நாடக அரசு மேகதாதுவில் உடனடியாக அணை கட்ட வேண்டும் என்றும், பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் கூறி, இன்று அனைத்து சங்கங்களின் கூட்டமைப்புகளையும் அழைத்து பந்த் என அறிவித்திருந்தார்.
தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் எந்தவொரு போக்குவரத்தும் நடைபெறாது என்றும், கடைகள் திறக்கப்படாது என்றும், தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு எந்தவொரு வாகனப் போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: காவிரி தண்ணீரை தர முடியாதா?... கர்நாடகாவிற்கு செக் வைக்கும் தமிழ்நாடு அரசு... காத்திருக்கும் ஆப்பு...!
தற்போது நாம் நின்று கொண்டிருக்கும் இடம் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி. கர்நாடக வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்த அந்தப் போராட்டம் நடைபெற்ற நிலையில், பெரும்பான்மையான சங்கங்கள், அதாவது போக்குவரத்து சங்கங்கள், கடை உரிமையாளர்கள் சங்கங்கள், பள்ளிகள் மற்றும் எந்தக் கூட்டமைப்புச் சங்கங்களும் அவருக்கு ஆதரவு அளிக்காத நிலையில், கர்நாடக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அந்த பந்த் இன்று நடைபெற்றிருந்தாலும் கூட, மாநில எல்லையில் உள்ள சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தற்போது இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தைப் பொறுத்தவரை, இரு மாநிலங்களுக்கு இடையே நல்ல போக்குவரத்து இருந்து வருகிறது. காலை முதலே வழக்கமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய கர்நாடக பேருந்துகளும் தற்போது வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலிருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கர்நாடகாவிற்கு வரக்கூடிய அனைத்து பேருந்துகளும் தற்போது இயல்பாகவே கர்நாடகாவிற்குச் சென்று வருகின்றன.
கர்நாடக அரசு, வாட்டாள் நாகராஜ் பந்த் அறிவித்த நிலையில், அவரைக் கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் எவ்விதப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்பதற்காக, கர்நாடக மாநில எல்லையில் கர்நாடக போலீசாரும், தமிழக எல்லையில் தமிழக போலீசாரும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டு, தொடர்ந்து இப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து, இந்தப் பகுதியில் காலை 30-க்கும் மேற்பட்ட கர்நாடக அமைப்பினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக கர்நாடக போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தற்போது போக்குவரத்து வழக்கம்போல் இயல்பாக நடைபெற்று வருகிறது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அமைப்புகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இன்று நடைபெற்ற இந்த பந்த்தால் பெரும்பாலான பொதுமக்களுக்கும், போக்குவரத்து மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் எந்தவொரு இடையூறும் இல்லாமல், போக்குவரத்து வழக்கம்போலவே செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!