தற்காலிக சபாநாயகர் கருப்பையா தேர்வு!! உத்தரவில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்!!
தமிழகத்தின் முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்ற நிலையில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் சி.ஜோசப் விஜய் இன்று தமிழ்நாட்டின் 13ஆவது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்டாததால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கழகம் (விசிக), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. விஜய்யுடன் தவெகவைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக (Pro-tem Speaker) தவெக எம்எல்ஏ கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். நாளை சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: தொடங்கியது விஜய் ஆட்டம்!! அதிகாரிகள் மாற்றம்!! முதன்மை செயலராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம்!
சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கருப்பையா 63,907 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2011 முதல் 2016 வரை அதிமுக சார்பில் எம்எல்ஏவாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் கருப்பையா. அவரது நியமனம் புதிய அரசின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு வேகம் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகராக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய், அரசியலில் நுழைந்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே முதலமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. புதிய அரசு நிர்வாகத்தை சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: ஆட்டம் ஆடலாம்னு நினைச்சீங்க!! விடமாட்டேன்! தவெக அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங்!!