ஆட்டம் ஆடலாம்னு நினைச்சீங்க!! விடமாட்டேன்! தவெக அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங்!!
ஒருவேளை யாருக்காவது நாம ஜெயிச்சிட்டோம், ஒரு ஆட்டம் ஆடிப் பார்க்கலாம்' என ஒரு எண்ணம் இருந்தால், இப்போதே இந்த நிமிடமே அதை அழித்துவிடுங்கள்.
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் 13ஆவது முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவருடன் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர், தந்தை சந்திரசேகர், உறவினர்கள் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பதவியேற்ற உடனேயே முதலமைச்சர் விஜய் உணர்ச்சி பொங்கப் பேசினார். “திட்டங்களை நிறைவேற்ற எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். பெண்கள் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்துவேன். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்கும். சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தி அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பேன். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முழு முயற்சி எடுப்பேன்” என்றார்.
இதையும் படிங்க: Breaking News! மக்களை ஏமாற்றி திசை திருப்பாதீங்க!! முதல்வர் விஜய் குற்றச்சாட்டிற்கு மு.க.ஸ்டாலின் பதில்!!
மேலும், “மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன். இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான், தப்பு செய்யவும் விட மாட்டான். அது யாராக இருந்தாலும் சரி, என் அரசில் என்னுடன் இருப்பவர்களாக இருந்தாலும் சரி” என்று கடுமையாக எச்சரித்தார்.
“ஒருவேளை யாருக்காவது ‘நாம் ஜெயிச்சிட்டோம், ஒரு ஆட்டம் ஆடலாம்’ என எண்ணம் இருந்தால் இப்போதே அதை அழித்துவிடுங்கள். இங்கு ஒரே மையம்தான், அது என் தலைமையிலானது மட்டும்தான். பவர் சென்டர் என்று எதுவும் இல்லை” என்று உறுதியாகக் கூறினார்.
தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்த விஜய், அரசியலில் நுழைந்த முதல் தேர்தலிலேயே முதலமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
புதிய அரசு மக்கள் நலனுக்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதலமைச்சர் விஜயின் உறுதிமொழிகள் தமிழகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: கைகோர்த்த விஜய் - ராகுல்காந்தி! காங்., அலப்பறை! ரஜினிகாந்த் - கமல்ஹாசன் பாணியில் புது வீடியோ!