விஜய்க்கு மீண்டும் டெல்லி சம்மன்! பொங்கல் முடிந்த கையோடு ஆஜராக சிபிஐ அதிரடி உத்தரவு!
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கரூா் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகச் சிபிஐ புதிய சம்மனை அனுப்பியுள்ளது.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கரூா் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகச் சிபிஐ புதிய சம்மனை அனுப்பியுள்ளது.தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு டெல்லி சிபிஐ (CBI) தலைமை அலுவலகம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஜனவரி 19-ஆம் தேதி அவர் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, விஜயிடம் நேற்று (ஜனவரி 12) சுமார் 7 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை திரும்பிய விஜய்க்கு, பண்டிகை முடிந்த அடுத்த சில தினங்களிலேயே மீண்டும் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், கரூரில் ஏற்பட்ட 7 மணி நேரத் தாமதம் மற்றும் கூட்ட மேலாண்மை தோல்வி குறித்து விஜயிடம் சுமார் 35-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. "கூட்ட நெரிசலுக்குக் காவல்துறையின் தவறான மேலாண்மைதான் காரணம்" எனத் தனது தரப்பு வாதத்தை விஜய் முன்வைத்த நிலையில், அதிகாரிகள் அதனை முழுமையாக ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இன்று காலை சென்னை திரும்பிய விஜய்க்கு, சிபிஐ அதிகாரிகள் மற்றொரு சம்மனை வழங்கியுள்ளனர். அதன்படி, பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்த கையோடு ஜனவரி 19-ஆம் தேதி அவர் மீண்டும் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
இதையும் படிங்க: “பொங்கட்டும் மகிழ்ச்சி; வெல்லட்டும் தமிழ்நாடு!” முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து!
இந்த இரண்டாவது கட்ட விசாரணையில், விஜய்யின் வாக்குமூலங்கள் மற்றும் ஏற்கனவே சிபிஐ அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்த கரூர் மாவட்டப் போலீசார் மற்றும் தவெக நிர்வாகிகளின் தகவல்களை ஒப்பிட்டு விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அனுமதி பெற்ற எண்ணிக்கையை விட அதிகமான தொண்டர்கள் ஏன் கூட அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து இன்னும் ஆழமான கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு விஜய் மீண்டும் டெல்லி செல்லவிருப்பது அவரது ரசிகர்களிடையே ஒருபுறம் அதிர்ச்சியையும், மறுபுறம் அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: டெல்டாவில் இன்றுடன் ஓய்கிறது மழை! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குட்நியூஸ்!