வயநாடு துயரம்... பறிபோன உயிர்கள்..! நிவாரணம் அறிவித்த கேரளா அரசு..!!
வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை தூண்டிய பயங்கர நிலச்சரிவு பலரின் உயிரைப் பலி கொண்டது. மேப்பாடி அருகே உள்ள கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட இந்த மண் சரிவில் முதலில் இருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், பின்னர் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. பலர் காயமடைந்தனர், சிலர் மண்ணுக்கு அடியில் சிக்கியிருந்தனர்.
மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலச்சரிவு வயநாட்டின் இயற்கைப் பாதிப்புக்கு உள்ளான பகுதியில் நிகழ்ந்துள்ளது. கடுமையான மழைப்பொழிவு காரணமாக மண் மற்றும் பாறைகள் பெரும் அளவில் சரிந்து, கட்டுமானத் தளத்தை மூடியது. உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து தொடர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. சிலர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள முதலமைச்சர் வி.டி. சதீஷன் இந்த சம்பவத்தை உடனடியாக கண்காணித்தார். மீட்புப் பணிகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாக அவர் உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்ட காரணங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவை கதிகலங்க வைக்கும் ஷிகெல்லா..! பதறும் மக்கள்... இதுவரை 6 பேர் பலி..!
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள், அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் நில சரிவில் சிக்கி உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ஐந்து பேரில் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் ஷிகெல்லா தொற்று..!! ஆயுர்வேத கல்லூரி மாணவர்களுக்கு என்ன ஆச்சு..?? மருத்துவமனையில் அட்மிட்..!!