×
 

#BREAKING இரும்பால் தலையில் பலத்த தாக்குதல்... கேரள ஐஐடி-யில் தமிழக மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்... நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் தமிழக மாணவி அஸ்வினி என்பவர்  மீது மர்மநபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்காடு மாவட்டம்  காஞ்சிகோட்டில் உள்ள ஐஐடியில் சேலத்தை சேர்ந்த  மாணவி தலையில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். மாணவி தனது நண்பர்களுடன் சாப்பாட்டு அறைக்கு நடந்து சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. படுகாயம் அடைந்த IIT மாணவி கோவையில்  உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம்  பாலக்காடு மாவட்டம்  கஞ்சிகோட்டில் உள்ள ஐஐடி  உயர்கல்வி நிறுவனத்தில்  சேலத்தை சேர்ந்த  அஸ்வினி என்ற மாணவி டேட்டா சயின்ஸ் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வருகின்றார். மாணவி அஸ்வினி  தனது நண்பர்களுடன் நேற்று இரவு சாப்பாட்டு அறைக்கு நடந்து  ன்றபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாணவியை இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் தலையில் படுகாயம் அடைந்த  மாணவி மயக்கம் அடைந்த நிலையில் , சக மாணவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு கோவையில்  உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு சேர்க்கப்பட்டார்.

இதையும் படிங்க: கலப்பட பால் குடித்த 4 பேர் பலி... உயிருக்கு போராடும் 14 பேர்... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்...!

இந்நிலையில் IIT உயர்கல்வி நிலைய வளாகத்தில் அடையாளம் தெரியாத நபரால் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாலக்காடு கசாபா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் IIT மாணவி அஸ்வினி மீது தாக்குதலை கண்டித்து சக மாணவர்கள் இரவு IIT கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையும் படிங்க: தன்னை அர்ப்பணித்து தவவாழ்வு.. இதய தெய்வம் அம்மா..!! ஜெ. திருவுருவப்படத்துக்கு செங்கோட்டையன் மரியாதை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share