×
 

அடக்கொடுமையே... ஓணம் கொண்டாட்டத்தில் சிரித்த முகத்துடன் நடனமாடிய அரசு ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தின்போது, நடனமாடிய அரசு ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தின்போது, நடனமாடிய அரசு ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமீப காலமாக இளம் வயதினர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருமணம், விழா கொண்டாட்டங்களில் நடனமாடும் போது மயங்கி விழுந்து உயிரிழப்பது, ஜிம்மில் பயிற்சி செய்யும் போது விழுந்து இறப்பது போன்ற மனதை உலுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உறைய வைத்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடனமாடிய அரசு ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அரசு ஊழியர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வயநாடு சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த ஜுனைஸ் அப்துல்லா (46) என்ற ஊழியர், சக ஊழியர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: இந்தியாவுக்கு தேவை நாங்கள் தான்!! ரஷ்யா கிடையாது! பொறாமையில் பொங்கும் ட்ரம்ப் ஆலோசகர்!

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கேரளாவில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: போலீசை சுட்டுவிட்டு தப்பியோடிய AAP எம்.எல்.ஏ.! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share