×
 
☰

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை! கேரளம் அரசு உத்தரவு!

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கேரளம் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது, 2006-ஆம் ஆண்டு கேரளப் பொதுப்பணித்துறை செயலாளராகப் பணியாற்றியபோது எழுந்த ஊழல் முறைகேடுகள் மற்றும் மலேசிய சிவில் பொறியாளரின் தற்கொலை விவகாரம் தொடர்பாக விரிவான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக் கேரள அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வரும் பரபரப்பான அரசியல் சூழலில், கேரள அரசின் இந்த உத்தரவு தேசிய அரசியலில் மாபெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கேரள மாநிலக் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், கடந்த 2006-ஆம் ஆண்டு அம்மாநிலப் பொதுப்பணித்துறை செயலாளராகப் பதவி வகித்தார். அக்காலகட்டத்தில், கேரள மாநிலப் போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதி உதவியுடன் அங்கமாலி முதல் திருவனந்தபுரம் வரையிலான எம்.சி. சாலையை மேம்படுத்தும் ரூ.215 கோடி மதிப்பிலான மெகா திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

இத்திட்டத்தின் பணிகளை மேற்கொண்ட 'PATI-BEL' என்ற கூட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளராகப் பணியாற்றிய மலேசிய நாட்டைச் சேர்ந்த சிவில் பொறியாளர் லீ சீ பீன், அப்போதைய பொதுப்பணித்துறையின் கடுமையான நெருக்கடிகள் மற்றும் பில் தொகையை விடுவிப்பதில் நிலவிய முறைகேடுகள் காரணமாக 2006-ல் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது அவர் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தில் அப்போதைய பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த ஞானேஷ் குமாரின் பெயர் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டாலும், ஆட்சி மாற்றத்திற்குப் பின் அந்த விசாரணை ஆவணங்கள் கிடப்பில் போடப்பட்டு மூடி மறைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் பிரமுகர் மலையன்கீழு வேணுகோபால் என்பவர் அளித்த விரிவான புகாரின் அடிப்படையில், கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, 2006-ல் பொதுப்பணித்துறை செயலாளராக ஞானேஷ் குமார் இருந்தபோது, மலேசியப் பொறியாளர் தற்கொலை செய்துகொண்டதும், அவரது கடிதத்தில் செயலாளரின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததும் தீவிரமான விவகாரம்; அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணை திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது; ஒரு அமைச்சராகப் புகாரில் முகாந்திரம் இருக்கும்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது; எனவே லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு விரிவான ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விசாரணை அவர் 2006-ல் கேரளாவில் அதிகாரியாக இருந்தபோது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பானது என்பதால், தற்போது அவர் வகிக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற அரசமைப்புப் பதவியின் பாதுகாப்பு இதற்குப் பொருந்தாது எனச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
 

இதையும் படிங்க: ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share