×
 

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் வெடிக்கும் போராட்டம்? கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு!

ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் நெருக்கடி நிலை அதிகரித்து வருகிறது.

மத்திய கிழக்கில் (மேற்காசியா) அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய பெரும் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பிராந்தியம் முழுவதும் போர் பதற்றம் உச்சத்தில் உள்ளது. 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவில் பல மாநிலங்களில் ஷியா முஸ்லிம் சமூகத்தினர் போராட்டங்கள் நடத்தினர். ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஷியா ஜமாஅத் சார்பில் அமெரிக்க தூதரகம், தூதரகங்கள் முன் முற்றுகை பேரணிகள், கருப்புக் கொடி ஏற்றல், மவுன ஊர்வலங்கள் நடைபெற்றன. 

காஷ்மீரில் ஸ்ரீநகர் லால் சௌக், புத்காம், பண்டிபோரா போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு "அமெரிக்கா-இஸ்ரேலுக்கு மரணம்" என்று கோஷமிட்டனர். கர்நாடகாவின் அலிபூர் கிராமத்தில் ஷியா பெரும்பான்மை உள்ள பகுதியில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. லக்னோ, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் ஷியா சமூகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் கமேனி கதை முடித்தது எப்படி? ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கிய சிஐஏ!! பக்கா ஸ்கெட்ச்!

இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறும் அபாயம் உள்ளதாக உள்துறை அமைச்சகம் (MHA) எச்சரித்துள்ளது. மாநில தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ஈரானுக்கு ஆதரவான போராட்டங்கள், ஷியா மிலிஷியாக்கள், தீவிரவாத குழுக்கள் (ஐஎஸ், அல்-கொய்தா) ஆகியவற்றை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. 

அமெரிக்கா, இஸ்ரேல் தூதரகங்கள், யூத மையங்கள், சுற்றுலா தலங்கள் போன்றவை தாக்குதல் இலக்குகளாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் இணைய வேகம் குறைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்றிரவு (மார்ச் 1, 2026) பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (CCS) அவசர கூட்டம் நடைபெற்றது. மதுரையில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய பிரதமர், இரவு கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். 
கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மேற்காசியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, வளைகுடா நாடுகளில் (யுஏஇ, சவுதி போன்றவை) உள்ள 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் நலன், எரிசக்தி பாதுகாப்பு, விமான போக்குவரத்து பாதிப்பு, போர் தீவிரமடைந்தால் திரும்ப அழைத்து வருதல் போன்றவை விரிவாக விவாதிக்கப்பட்டன. போர் நிறுத்தம், உரையாடல் மூலம் தீர்வு காண வேண்டும் என்று CCS வலியுறுத்தியது. இந்தியா அமைதி, ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக உள்ளது என்று மீண்டும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ரத்த வெறி கொண்ட பயங்கரவாத ஆட்சி! ஆயுதங்களை கீழ போடுங்க!! ஈரானை எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share