×
 

த்ரிஷாகிட்ட உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கணும்!! வெளுத்து வாங்கிய குஷ்பூ!

உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவருமான குஷ்பூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷாவிடம் நிபந்தனையின்றி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்திய பதிவு வைரலாகி வருகிறது.

தஞ்சாவூரில் காவிரி நீர் உரிமையை வலியுறுத்தி நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்ந்து அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக நடிகை த்ரிஷாவை குறிப்பிட்டு அவர் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை கிளப்பியுள்ளன. இந்த விவகாரத்தில் தற்போது நடிகையும், பாஜக மாநில துணைத் தலைவருமான குஷ்பூவும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் குஷ்பூ, உதயநிதி ஸ்டாலினின் பேச்சு மிகவும் தரக்குறைவாகவும், பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையிலும் இருந்ததாக விமர்சித்துள்ளார். பெண்களை அரசியல் தாக்குதலுக்கான கருவியாக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், பொது வாழ்வில் இருக்கும் தலைவர்கள் தங்களது வார்த்தைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும், பொதுமேடைகளில் பேசப்படும் கருத்துகளுக்கு எல்லைகள் இருக்க வேண்டும் என குறிப்பிட்ட குஷ்பூ, பெண்களின் மரியாதையை பாதிக்கும் வகையிலான பேச்சுகள் ஒருபோதும் நியாயப்படுத்தப்பட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் கைது! பக்கத்து வீட்டில் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்!

 

Heard #Udhayanidhi Stalin's speech. It was crass, cheap and deeply derogatory; reflecting the very political culture he seems eager to inherit.

If those with such a mindset aspire to lead a political party and one day govern the state, then God help us. What else can one expect…

— KhushbuSundar (@khushsundar) August 4, 2026

நடிகை த்ரிஷாவை பொதுவெளியில் இழிவுபடுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, உதயநிதி ஸ்டாலின் எந்த நிபந்தனையும் இன்றி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குஷ்பூ தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும் அரசியல் நாகரிகம் உதயநிதியிடம் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் பேச்சு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் அரசியல் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தீவிர விவாதமாக மாறியுள்ளது.

குஷ்பூ வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. உதயநிதி பேச்சு, அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகள், சட்ட நடவடிக்கைகள் மற்றும் குஷ்பூவின் கருத்து ஆகியவை தமிழக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் கைது! நீலாங்கரையில் அதிரடி காட்டிய விஜயகுமார் IPS யார் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share